The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
The GOAT Vijay Live: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் (The GOAT) திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
LIVE
Background
The GOAT Vijay Live: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் (The GOAT) திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
தி கோட் திரைப்படம்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் தி கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் 80 சதவிகிதம் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு மற்றும் அஜ்மல் என பெரும் நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளில் அதிகாலயிலேயே சிறப்பு காட்சிகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியே அரங்கேற உள்ளது.
விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்:
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியாக உள்ள சூழலில், திரையரங்கு வளாகங்களில் விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளனர். பல அடி உயரத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் மற்றும் கட் அவுட்களை அமைத்துள்ளனர். விஜய் படங்களுக்கு மாலை அணிவிப்பது, சூடம் காட்டுவது, தேங்காய் உடைப்பது போன்ற செயல்களில் இடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள பல பிரதான திரையரங்குகளில், அதிகாலை முதலே ரசிகர்கள் அலைமோத தொடங்கியுள்ளனர். இதனால், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
தி கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு:
முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக, விஜய் நடித்துள்ள இரண்டாவது கடைசி படம் தி கோட். இதன் காரணமாக இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் முதலில் வெளியான இப்படத்தின் மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. குறிப்பாக ஸ்பார்க் படத்தில் விஜயின் தோற்றத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வெளியான தி கோட் பட டிரெய்லரில், விஜயின் தோற்ற மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், டிரெய்லரும் சுவாரஸ்யமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. மேலும், டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை இளம் வயது நபராக காட்டி இருப்பதும், ஆர்வத்தை தூண்டியுள்ளது. கடைசியாக வெளியான மட்டை பாடலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வசூலில் சாதனை படைக்குமா?
தி கோட் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டுமே, ஏற்கனவே சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் வார இறுதிக்குள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் எனவும் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம், சுமார் 340 கோடி ரூபாயை வசூலித்தது. அந்த வசூலை தி கோட் திரைப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
The GOAT Movie Updates LIVE: கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி - புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்தின் GOAT review#BussyAnand #TheGOAT #TheGreatestOfAllTime pic.twitter.com/kEimsHI4MS
— ABP Nadu (@abpnadu) September 5, 2024
த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி எனவும் , விஜய் சிறப்பாக நடித்துள்ளதாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கோட் படம் பார்க்க குவியும் ரசிகர்கள்! போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை!
கோட் படம் பார்க்க மாலை நேர காட்சிக்கு பலரும் குவிந்து வருவதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
தளபதி விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட வாய்ப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி - யுவன் சங்கர் ராஜா
தளபதி விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட இப்படியொரு வாய்ப்பினை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
குடும்பங்களுடன் கோட் படம் பார்க்க குவியும் ரசிகர்கள்
கோட் படத்திற்கு பலரும் குடும்பங்களுடன் தொடர்ந்து திரையரங்கில் குவிந்து வருகின்றனர்.
The GOAT Movie Updates LIVE: விஜய்யிடம் சனாதனத்தை பார்க்கின்றனர்- தமிழிசை சௌந்தரராஜன்
The GOAT Movie Updates LIVE: எங்களிடம் சனாதனத்தை பார்த்தவர்கள், இப்போது விஜய்யிடம் பார்க்கின்றனர், சனாதனம் என்னவென்று விசிக எம்.பி ரவிக்குமார் கருத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோட் திரைப்பட தலைப்பை வைத்து சனாதனத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தார் எம்.பி ரவிக்குமார் .