மேலும் அறிய

Tughlaq Durbar Trailer: அமைதிப்படை அமாவாசையை நினைவுப்படுத்தும் விஜய் சேதுபதி! - வெளியானது துக்ளக் தர்பார் டிரைய்லர்!

Tughlaq Durbar Trailer: “ மை நேம் ஈஸ் சிங்கார வேலன் தலைவரே ” என்கிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சியில் விஜய் சேதுபதியில் நடிப்பு அப்படியே அமைதிப்படையில் சத்யராஜை இமிட்டேட் செய்வது போலவே உள்ளது. 

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) . அரசியல் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படம் வருகிற  செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும் , செப்டம்பர் 11-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) படத்தில் டிரைலரை வெளியிட்டுள்ளனர் படக்குழு.


டிரைலரில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் காட்சிகள் நமக்கு அமைதிப்படை அமாவாசையை நினைவு படுத்துவதாக உள்ளது. அதே போல டிரைலரின் இறுதியில் விஜய் சேதுபதி மற்றும் சத்யராஜ் பேசிக்கொள்வது போல காட்சிகள் அமைந்துள்ளது. அதில் சத்ய ராஜ் “ ஆமா உனக்கு இந்தி தெரியுமா” என இந்தியிலேயே கேட்க, கைகளை கட்டிக்கொண்டு , உடல் நெளிவுகளுடன் “ மை நேம் ஈஸ் சிங்கார வேலன் தலைவரே ” என்கிறார் விஜய் சேதுபதி. அந்த காட்சியில் விஜய் சேதுபதியில் நடிப்பு அப்படியே அமைதிப்படையில் சத்யராஜை இமிட்டேட் செய்வது போலவே உள்ளது. 


முன்னதாக வெளியான டீசரில் சீமானின் நாம் தமிழர் கட்சி கொடியின் நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதில் வில்லனாக நடிக்கும் பார்த்திபன் பெயரும் ராசிமான் என்று வைத்திருந்தார்கள். அப்போது நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் திரைப்படத்தை கடுமையாக எதிர்த்தனர். திரைப்படக் குழு, இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல, தெரியாமல் நடந்ததென்று விளக்கம் அளித்தனர். விஜய் சேதுபதியும் அதனை கவனிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் சீமானோ அது குறித்த கேள்விகளை லாவகமாக எதிர்கொண்டார். அது குறித்து பேசி திரைப்படத்துக்கு விளம்பரம் தர விரும்பாமல், திரைப்படம் மூலம் தனக்கு விளம்பரமாக இருக்கட்டும் என்று எளிதாக எதிர்கொண்டார். அதனால் திரைப்படத்திற்கு வழக்குகள் எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரவில்லை. படத்தில் 'காமி காமி'  மற்றும்  'அண்ணாத்த சேதி'  என இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. துக்ளக் தர்பார் படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படம் தவிர்த்து விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபது என இன்னும் மூன்று படங்கள் இந்த மாத வெளியீட்டிற்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget