மேலும் அறிய

பாதியில் பின்வாங்கிய தயாரிப்பாளர்...மொத்த சுமையை தாங்கிய விஜய் சேதுபதி..முத்து என்கிற காட்டான் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

முத்து என்கிற காட்டான் வொ சீரிஸ் படப்பிடிப்பின் பாதியில் தயாரிப்பாளர்கள் பின்வாங்வே நடிகர் விஜய் சேதுபதி இந்த தொடரை தயாரிக்க முன்வந்தார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு

முத்து என்கிற காட்டான்

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.

மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.

இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.
விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி.  நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்

பாதியில் பின்வாங்கிய தயாரிப்பாளர்கள்

ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.

பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.

இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.

தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.

அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget