ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறைவான வசூலை ஈட்டியுள்ளது

விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படம் திரையரங்கில் இரண்டு வாரங்களை கடந்துள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற நிலையிலும் பத்தா திரைப்படம் ரூ22.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
அண்மை காலங்களில் கடந்த சில மாதங்களில் வெளியான படங்கள் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. மொத ரத்திரி , டோரதி ஆகிய படங்களை மக்கள் பாராட்டி வந்த நிலையில் இந்த வரிசையில் விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படமும் இணைந்தது. பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் பத்தா. அட்லீ இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு ரவுடிக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையில் ஏற்படும் உறவை மையமாக வைத்து உருவான இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலங்கிய கண்களோடு திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கும் தீணிப்போடும் விதமாக பத்தா திரைப்படம் அமைந்தது.
இரண்டு வார வசூல்
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற நிலையிலும் பத்தா திரைப்படம் பாக்ஸ் அபிஸில் குறைவான வசூலையே பதிவு செய்துள்ளது. பத்தா, இரண்டாவது வாரத்தில் மொத்தம் ரூ22.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான சிக்மா , ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களைக் காட்டிலும் பத்தா அதிகம் வசூலித்துள்ளது என்றாலும் படத்திற்கு கிடைத்த வரவேற்புடன் ஒப்பிடுகையில் இந்த வசூல் குறைவே. மேலும் இந்த வசூல் தயாரிப்பாளருக்கு பிரேக் ஈவனை கூட எட்டவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி.
என்ன காரணம் ?
படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும் பத்தா திரைப்படத்தின் ரிலீஸூக்கு முன் மிக குறைவான ப்ரோமோஷன் செய்யப்பட்டது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதே நேரம் மக்கள் திரையரங்கில் படம் பார்க்க பெரியளவில் ஆர்வம் காட்டாததும் குறிப்பிடத் தகுந்த ஒரு காரணம்.
அக்டோபர் 15 ஆம் தேதி ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு பத்தா படத்தின் வசூலில் பெரியளவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















