மேலும் அறிய

Leo Update: அடுத்த ‘லியோ’ அப்டேட் இந்த நடிகரின் பிறந்தநாளில் வரும்... விஜய் ரசிகர்கள் சொல்றத கேளுங்க...!

பாலிவுட்டின் நட்சத்திர நாயகனாக நடிக்கும் சஞ்சய் தத் லியோவில் இணைந்துள்ளதால், அவரது பிறந்த நாளை ஒட்டி நேற்று லியோவின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ் காட்டியதால் லியோவிலும் அந்த ஹைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லியோ குறித்த பல்வேறு வதந்திகள் வெளியே கசிந்தாலும் அதன் அப்டேட் குறித்து மிகவும் கவனமாக படக்குழு இருந்து வருகிறது. விஜய் பிறந்த நாளன்று ‘ நான் ரெடி தான்’ பாடலையும், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. நான் ரெடி தான் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. 

காஷ்மீர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட படங்களில் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாலிவுட்டின் நட்சத்திர நாயகனாக நடிக்கும் சஞ்சய் தத் லியோவில் இணைந்துள்ளதால், அவரது பிறந்த நாளை ஒட்டி நேற்று லியோவின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது.

ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் சஞ்சய் தத் கழுகுக்கு கீழ் இருந்து வாயில் சிகரெட்டுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தன. அதைப் பார்த்த ரசிகர்கள், லியோ அதிரடி ஆக்‌ஷனில் கலக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் லியோவின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடிகர் அர்ஜூன் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதை ஒட்டி அன்றைய தினம் லியோ அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது. விஜய், சஞ்சய் தத் வரிசையில் அர்ஜூன் பிறந்த நாளன்று, அவரது கேரக்டர் குறித்த க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லியோவில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் அர்ஜூன், வில்லனாக மாறிடுவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இது குறித்து படக்குழு எந்தக் கருத்தும் கூறாத நிலையில், அர்ஜூன் குறித்த அப்டேட் தெரிந்து கொள்ள ஆகஸ்ட் 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget