மேலும் அறிய

”எல்லாத்தையும் பாசிட்டிவாக நினைச்சு பாருங்க” - வீடியோ வெளியிட்ட விஜய் அப்பா

”வாழ்க்கையில் இப்படி நடந்து விட்டதே, அறுவை சிகிச்சை செய்து விட்டோமே என்று நினைத்தால், மன அழுத்தம் தான் அதிகரிக்கும்”

வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்வர் எஸ்.ஏ.சந்திரக்சேகர். இவர் 1981ம் ஆண்டு  விஜயகாந்த் நடிப்பில்  வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தார். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் நடித்திருந்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. 

அண்மையில் பாரதிராஜா நடிப்பில் வெளிவந்த கருமேகங்கள் கலைகின்றன படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வீடியோ பதிவு ஒன்றை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். அதில், “நம் வாழ்க்கையில் அடிக்கடி சில மறக்க முடியாத நிகழ்வுகள் நடைபெறும். சமீபத்தில் நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் எப்பொழுதுமே ஆக்டிவான இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் கடந்த 3மாதங்களாக எனது எனர்ஜி குறைவது போல உணர்வு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவரை அணுகினேன். எனது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் சில பிரச்சனை இருப்பதாக கூறி உடனே அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். அதன்படி, சர்ஜரி செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்று கொள்ள வேண்டும். 

வாழ்க்கையில் இப்படி நடந்து விட்டதே, அறுவை சிகிச்சை செய்து விட்டோமே என்று நினைத்தால், மன அழுத்தம் தான் அதிகரிக்கும். அதற்கு பதிலாக எனக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரை அணுகினேன். அவர் ஸ்கேன் எடுத்து உடனே சர்ஜரி செய்தேன். அது நல்ல விஷயம். இப்படி எல்லாதையும் பாசிட்டிவாக எடுத்து கொண்டால் எல்லாமே நன்றாக நடக்கும். எல்லாதையும் பாசிட்டிவாகவே எடுத்து கொள்வோம். என்னுடைய அனுபவத்தை ஷேர் செய்து கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

மேலும் படிக்க: Daiji First Look: அடுத்த ‘காந்தாரா'வா... ‘டைஜி’ பட போஸ்டரால் அசரடிக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த்!

Siren First Look: கத்தியும் கருப்பு சாயாவும்...! மிரட்டலாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி! பிறந்தநாளில் செம்ம அப்டேட்!

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget