இப்படிப் பேசலாமா விஜய் தேவரகொண்டா.. கோபப்படும் பெண்கள்; காரணம் இதுதான்
தெலுங்கு திரைப்படங்களின் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஷாலினி பாண்டேவுடன் அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.
தெலுங்கு திரைப்படங்களின் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஷாலினி பாண்டேவுடன் அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் என ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல ரீச் கொடுத்தது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். கீத கோவிந்தம் படத்தில் அவர் ராஷ்மிகாவின் பின்னால் மேடம், மேடம் என்று அலைவார். அது தான் விஜய் தேவரகொண்டாவுக்கு நிறைய பெண் ரசிகைகளைப் பெற்றுத்தந்தது. ராஷ்மிகா அந்தப் படத்தில் சொல்வது போல் மேடம் மேடம் என்று பேசினால் யார் தான் லவ் பண்ண மாட்டார்கள் என்று கேட்பார். அது உண்மைதான்.
இளம் பெண்களின் கனவுக்கண்ணன் விஜய் தேவரகொண்டா தற்போது அவர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் லிகெர் எனும் திரைப்படத்தின் ஒரு காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு டிராமா குயின் இருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.
லிகர் படத்தின் பாடலை புரோமோட் செய்ய அவர் இந்தப் பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ட்விட்டராட்டி ஒருவர் இந்த 2022ல் கூட இப்படியெல்லாம் விமர்சிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கின் முன்னனி இயக்குநரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.
View this post on Instagram
இப்படத்தில் நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கும் நிலையில், ரம்யா கிருஷ்ணன். ரோனிட், விஷூ ரெட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குத்துச்சண்டை வீரரைப்பற்றி என்பதால் ஆக்சன் மற்றும் காதல் ஆகிய இரண்டையம் மையப்படுத்தி வரவிருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். அவ்வப்போது இப்படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா பதிவு எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.