மேலும் அறிய

Vijay Antony: 2வது மகளுடன் விஜய் ஆண்டனி கொடுத்த கியூட் போஸ்... 'ரத்தம்' பிரஸ் மீட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!

Vijay Antony at Ratham Press meet: தனது இரண்டாவது மகள் லாராவுடன் 'ரத்தம்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் விஜய் ஆண்டனி.

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான முழு நீள காமெடி என்டர்டெயின்மென்ட் திரைப்படங்களான ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களை படு பங்கமாக கலாய்த்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து தற்போது சீரியஸான அரசியல் கதைக்களத்தை கையில் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.

 

Vijay Antony: 2வது மகளுடன் விஜய் ஆண்டனி கொடுத்த கியூட் போஸ்... 'ரத்தம்' பிரஸ் மீட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!
இன்ஃபினிடி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லலிதா தனஞ்செயன், பிரதீப், கமல் போரா, விக்ரம் குமார், பங்கஜ் போரா கூட்டணி சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசைமைத்துள்ளார். இவர் தான் 'தமிழ் படம்' திரைப்படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரத்தம் ட்ரைலர் :

ரத்தம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி திரை ரசிகர்களின் கவனம் பெற்றது. இரண்டு வெவ்வேறு லுக்கில் தனது வழக்கமான சீரியஸ் லுக்கில் மிரட்டலாக காட்சியளித்து இருந்தார் விஜய் ஆண்டனி. செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருந்த இப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2, ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் சித்தா உள்ளிட்ட  படங்களின் ரிலீசால் ரத்தம் திரைப்படம் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Vijay Antony: 2வது மகளுடன் விஜய் ஆண்டனி கொடுத்த கியூட் போஸ்... 'ரத்தம்' பிரஸ் மீட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!

பத்திரிகையாளர்கள் சந்திப்பு:

ரத்தம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனது இரண்டாவது மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டு க்யூட்டாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

 

சகஜ நிலைக்கு திரும்பும் விஜய் ஆண்டனி :

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த துயரத்தில் இருந்து விஜய் ஆண்டனி விரைவில் மீண்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிராத்தனையாக இருந்தது. தற்போது அந்த துயரத்தில் இருந்து சற்று தன்னை தளர்த்தி கொண்டு மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. பட தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய கூடாது என்ற காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி என்ற தகவல் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget