காஸ்ட்லி விருந்து.. ராஜஸ்தான் கோட்டையில் திருமணம்.. ஹனிமூன் : பல கண்டிஷன்களோடு நடக்கும் விக்கி - கத்ரீனா திருமணம்..
பாலிவுட் நடிகர்கள் கத்ரினா கைஃப், விக்கி கௌஷல் ஆகியோரின் திருமண விழாவுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலிவுட் நடிகர்கள் கத்ரினா கைஃப், விக்கி கௌஷல் ஆகியோரின் திருமண விழாவுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் 6 அன்று, மணப்பெண்ணும், மணமகனும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து திருமணம் நிகழும் இடத்திற்கு வந்துள்ளனர். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புகளும் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 9 அன்று, விக்கி - கத்ரினா திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது,
டிசம்பர் 7 அன்று, சங்கீத் நிகழ்ச்சியும், டிசம்பர் 8 அன்று மணப்பெண்ணுக்கு மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. மேலும், இந்தத் தம்பதியினர் இரு திருமண நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். பஞ்சாபிய முறைப்படியும், வெள்ளையர்களின் ஆங்கிலேய முறைப்படியும் திருமண நிகழ்ச்சி மொத்தம் இரண்டு முறை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திருமண நிகழ்ச்சி, ராஜஸ்தானின் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடைபெறவுள்ளது. 14வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோட்டையை, ராஜஸ்தானின் அரச குடும்பம் ஒன்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சுமார் 120 விருந்தினர்களுக்குப் பல்வேறு குதூகலமூட்டும் நிகழ்ச்சிகளை நடத்த மிகச் சிறந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளன.
மணப்பெண்ணான கத்ரினாவுக்கு மெஹந்தி, சங்கீத், திருமணம், திருமண வரவேற்பு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைசிறந்த வடிவமைப்பாளர்களான அபு ஜானி, மணிஷ் மல்ஹோத்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விக்கியின் உடைகளைக் குணால் ராவல், ராகவேந்திரா ரத்தோர் ஆகிய பிரபல வடிவமைப்பாளர்கள் தயாரித்துள்ளனர்.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் சுமார் 120 விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அனைத்து விருந்தினர்களுக்கும் தனித்தனியாக ரகசிய எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விருந்தினர்களின் பட்டியலில் கரண் ஹோஜர், அலி அப்பாஸ் ஜாபர், கபீர் கான், மினி மதூர், ரோஹித் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, வருண் தவான், ராதிகா மதன், ரவீனா டாண்டன், நேஹா தூபியா முதலானோர் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மணமக்கள் இருவரும் வி.ஐ.பிக்கள் என்பதாலும், விருந்தினர்களும் வி.ஐ.பிக்கள் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சல்மான் கானின் தனிப்பட்ட பாதுகாவலரும், டைகர் செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணத்திற்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக ரகசிய எண் வழங்கப்பட்டுள்ளதால் யார் எந்த அறையில் தங்கியிருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் பஞ்சாபி வகை உணவுகளும், சர்வதேச வகை உணவுகளும் பரிமாறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.