மேலும் அறிய

பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி மறைந்தார். அவருக்கு வயது 70. உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி மறைந்தார். அவருக்கு வயது 70. உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மே 16 ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினர் எதையும் உறுதி செய்யவில்லை. விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதியாகும் போது தலைக்காயங்களுடன் அனுமதியாகியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தால் உயிரிழந்திருக்கலாம் என்று உறவினர் ஒருவர் பெயர் குறிப்பிடாமல் கூறியுள்ளார். மருத்துவமனையில் தான் அவர் கீழே விழுந்தார் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.

விஜயலட்சுமியின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் சினிமாவில் நடித்ததைவிட சீரியலில் அதிகம் நடித்துள்ளார். 

விஜயலட்சுமியுடன் நடித்துவந்த வீனா வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிஸ் யு பிரின்சஸ், நான் விஜயலட்சுமி அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவேன். அவர் எல்லோருக்கும் இனிமையானவராக இருந்தார். அவரது மகள் கிரண் அவரை தாயுள்ளத்தோடு பேணி வந்தார். உன் இழப்புக்கு ஆறுதல் கூறுகிறேன். விஜி மா ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின் மூலம் அறியப்பட்டார். ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதில் விஜயலட்சுமி, ஷ்வப்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ரஜினி, கமல் படங்களில் பெரும்பாலானவற்றில் அவர் தோன்றுவார். 1980களில் பரபரப்பான துணை நடிகையாக உலா வந்தார். பின்னாளில் சின்னத்திரையில் சீரியல் சூடுபிடிக்க அது அவரை ஸ்வீகரித்துக் கொண்டது. புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget