மேலும் அறிய

Breaking News LIVE: ஈரோடு இடைத்தேர்தல் - 20 கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்

ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் இங்கே காணலாம்..

LIVE

Key Events
Breaking News LIVE: ஈரோடு இடைத்தேர்தல் - 20 கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்

Background

இயக்குனர் கே. விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலங்களாகவே, சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு அவர் வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பயணம்:

1965-ம் ஆண்டில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை வென்றார். இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 53 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.  தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை  கமலை வைத்து இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

 கடந்த 2017ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதோடு,  பத்ம ஸ்ரீ'விருதையும் வழங்கி இந்திய அரசு அவரை  கவுரவித்துள்ளது. இயக்குனர் கே. விஸ்வநாத் 7 முறை நந்தி விருது, 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி:

ஐதராபத்தில் வைக்கப்பட்டுள்ள கே. விஸ்வநாத்தின் உடலுக்கு தெலுகு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதேபோன்று, இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஸ்வநாத்தை தனது மாஸ்டர் என குறிப்பிடும் கமல்ஹாசன், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

21:44 PM (IST)  •  03 Feb 2023

ஈரோடு இடைத்தேர்தல் - 20 கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்

ஈரோடு இடைத்தேர்தலுக்காக கூடுதலாக 20 பொறுப்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நியமித்துள்ளனர். 

20:00 PM (IST)  •  03 Feb 2023

Breaking News LIVE: ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையின் புதிய எஸ்.பி.ஆக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.

19:06 PM (IST)  •  03 Feb 2023

Breaking News LIVE : இரட்டை இலை சின்னம் விவகாரம் ; அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை!

ஈரோடு வில்லரசன்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

18:00 PM (IST)  •  03 Feb 2023

Breaking News LIVE: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

குற்றவழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிப்பதில் நடைமுறைகளை வகுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலஒ வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

17:08 PM (IST)  •  03 Feb 2023

Breaking News LIVE: தளபதி ’67’ திரைப்படம் டைட்டில் அப்டேட் - படக்குழு அறிவிப்பு!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget