மேலும் அறிய

​Kartika Nair Marriage: ‘கோ’ பட நடிகை, ராதா மகள் கார்த்திகாவின் கோலாகலத் திருமணம்.. சங்கமித்த 80ஸ் நடிகர், நடிகைகள்!

ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார். 

​Kartika Nair Marriage: 80களில் எவர்கிரீன் நடிகையாக வலம்வந்த ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார். 
 
அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதா 80களில் கனவு நாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ராதா எவர்கிரீன் நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்த ராதா, மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். ராதாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். 
 
அதில், ராதாவின் மூத்த மகளான கார்த்திகா 2009ம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து திரையில் அறிமுகமானர். பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘கோ’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். தொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்திலும் கார்த்திகா நடித்து அசத்தினார். ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் கார்த்திகாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிய கார்த்திகா பிசினஸில் ஆர்வம் காட்டி வந்தார். 
 
இந்த நிலையில் அண்மையில் கார்த்திகாவுக்கு ரோஹித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த சூழலில் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
 
View this post on Instagram
 
A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில், ராதிகா, சுஹாசினி, ரேவதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல 80களின் முன்னணி நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனர். ராதாவின் மகளின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர். 
 
View this post on Instagram
 
A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget