![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ரசிகர்களுக்கு இளையராஜா வைத்த கோரிக்கை!
"தமிழ் மொழியில் மட்டுமே பாடல் வரிகள் வந்து கொண்டிருக்கின்றது. வேறு வேறு மொழிகளில் வரவில்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்" - இளையராஜா
![Watch Video: தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ரசிகர்களுக்கு இளையராஜா வைத்த கோரிக்கை! Very happy to see your responses & waiting to hear in other languages too, ilayaraja says on asking lyrics from fans for his tune Watch Video: தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ரசிகர்களுக்கு இளையராஜா வைத்த கோரிக்கை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/27/b7e7af8df7ca2ffb55cfc5da08f9fa19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இசையமைப்பாளர் இளையரஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாது இவரது பாடல்களின் மெட்டுக்கள் பல்வேறு மொழி படங்களின் பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் வைத்திருக்கும் இளையராஜா, சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், மெட்டு ஒன்றை அமைத்து அதற்கு பாடல் வரிகள் எழுதி தருமாறு ரசிகர்களிடம் கேட்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி எந்த மொழியில் வேண்டுமானலும் பாடல் வரிகள் இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலானது.
Are you ready? pic.twitter.com/sQyA1vZSXO
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 26, 2021
அதனை அடுத்து, பெரும்பாலான ரசிகர்கள் பாடல் வரிகளை எழுதி அனுப்பி இருக்கின்றனர். இது குறித்து இன்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் இளையராஜா, “ரசிகர்களே உங்களுடைய ஆர்வத்தை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.இந்த கனமழையும் கடந்த உங்களது அன்பு மண்டலம் இருக்கின்றதே அதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எது ஜனங்களுக்கு செல்ல வேண்டும், எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். விரைவில் என்னுடைய தேர்வை உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆனால், தமிழ் மொழியில் மட்டுமே பாடல் வரிகள் வந்து கொண்டிருக்கின்றது. வேறு வேறு மொழிகளில் வரவில்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், மிஸ் ஆகியிருக்கு. அந்த ரசிகர்களையெல்லாம் இந்த அறிவிப்பு சென்று சேரவில்லையா என தெரியவில்லை. கொட்டுங்கள். மழையாக கொட்டுங்கள்” என தெரிவித்திருக்கிறார் அவர்.
Very happy to see your responses & waiting to hear in other languages too pic.twitter.com/1Pt0XefubM
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 27, 2021
Very happy to see your responses & waiting to hear in other languages too pic.twitter.com/d6jZ6ZxYPC
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 27, 2021
இந்த அறிவிப்பை, தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பேசி வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் இளையராஜா. அவரது கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் பல மொழிகளிலும் பாடல் வரிகளை அனுப்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லை' என்ற பாடலை இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. அவருடைய திறமைக்கு ஏற்ப இந்தப் பாடலும் வரியும் அவருக்கு எவ்வளவு பொருத்தம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்று அமைந்தது தான் மற்றொரு பாடல் வரி, "நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா". இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப 45 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் திரை இசை உலகில் கால் பதித்தாலும் அவருடைய இசை காலம் கடந்து அழியாத ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)