Varisu Third Single: ‘அம்மா இது உனக்காக’.. வந்தாச்சு வாரிசின் 3 ஆவது சிங்கிள் அப்டேட்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
இது தொடர்பான செய்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிள் எப்போது வெளியாகியாகும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரிசு படம் வருகிற பொங்கலையொட்டி வெளியாகும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களும் பாடல்களும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்து வருகிறது. முதலில், ரஞ்சிதமே பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஒரு சில நாட்களிலேயே அந்தபாடல் வைரலானது. அடுத்தடுத்தாக, 30 ஆண்டு கால விஜயின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டது. இந்தபாடலை நடிகர், சிம்பு பாடினார். அத்துடன், தீ செட்டில் ஆடி அசத்தினார்.
View this post on Instagram
இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் குறித்தான அப்டேட்டை அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அந்த அப்டேட்டின் படி ”சின்னகுயில் சித்ரா பாடியுள்ள இந்தப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது” என்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘அம்மா இது உனக்காக என்றும் வாரிசின் ஆன்மா’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல் அம்மா செண்டிமெண்ட் பற்றிய பாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு படத்தின் விநியோகம்
தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள தியேட்டர்களில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது. வாரிசு படத்தை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஆற்காடு மாவட்டங்களின் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் படங்களின் விநியோகஸ்தர்களையும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாரிசு படத்துக்காக களமிறங்கியதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வாரிசு Vs துணிவு
வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கும் துணிவு படத்திலிருந்து, இதுவரை “சில்லா சில்லா” மற்றும் “காசேதான் கடவுளடா” பாடல்கள் வெளியாகி உள்ளன. இப்பாடல்கள் அஜித் ரசிகர்களிடமிருந்து கலைவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், போகப் போக செம ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வாரிசிலிருந்து ஒரு அப்டேட் வந்தால், அடுத்த நாளே துணிவிலிருந்து அப்டேட் வருகிறது என்றும் சில விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்து வருகின்றனர்.