மேலும் அறிய

Valentine's Day: "மனம் விரும்புதே உன்னை” - ஹீரோயின்களின் பார்வையில் காதல் பாடல்கள்!

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல்கள் பற்றி காணலாம்.

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பொதுவாக சினிமாவில் ஆண்கள் தான் பெண்ணின் மீதான காதலை நினைத்து பாடல் பாடுவது போன்ற காட்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில படங்களில் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல்கள் இருக்கும். அதனைப் பற்றி காணலாம். 

  • தாஜ்மகால் - சொட்ட சொட்ட நனையுது 

1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் “தாஜ்மஹால்”. ரியா சென் இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுஜாதா பாடிய “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்” பாடல் மிகப்பிரபலமானது. 

  • நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை 

1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் தேவா இசையில் விஜய், சூர்யா, கௌசல்யா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் “நேருக்கு நேர்”. இப்படத்தில் ஹரிணி பாடிய “மனம் விரும்புதே உன்னை” பாடல் இடம் பெற்றிருந்தது. 

  • கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா

1998 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், கரண், சிம்ரன் நடிப்பில் “கண்ணெதிரே தோன்றினாள்” படம் வெளியானது. இதில் தேவா இசையில் ஹரிணி குரலில் இடம்பெற்ற ”சந்தா ஓ சந்தா” பாடல் பெண்ணின் காதலை அழகாக எடுத்துரைத்தது. 

  • ரிதம் - கல கலவென 

 

2000 ஆம் ஆண்டு அர்ஜூன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் “ரிதம்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “கலகலவென பொழியும்” பாடல் பெண்ணின் காதலை மழைச்சாரலாக தூவியிருந்தது. 

  • அமர்க்களம் - உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு 

 

1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படம் வெளியானது. இப்படத்தில் பரத்வாஜ் இசையில் சித்ரா குரலில் இடம் பெற்ற “உன்னோடு வாழாத வாழ்வென்ன” பாடல் காதலர்களின் கீதமாக அமைந்தது.

  • நினைத்தேன் வந்தாய் - உன் மார்பில் விழி மூடி 

 

1998 ஆம் ஆண்டு கே.செல்வபாரதி இயக்கத்தில் விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் வெளியான படம் “நினைத்தேன் வந்தாய்”. இப்படத்தில் தேவா இசையில் கே.எஸ்.சித்ரா பாடிய “உன் மார்பில் விழி மூடி” பாடலின் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும். 

  • காதல் சுகமானது - சொல்லத்தான் நினைக்கிறேன்

 

2002 ஆம் ஆண்டு பாலசேகரனின் இயக்கத்தில் தருண் குமார், சினேகா, ப்ரீதா விஜயகுமார் நடிப்பில் வெளியான படம் “காதல் சுகமானது”. சிவ ஷங்கர் இசையமைத்த இப்படத்தில் “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற பாடலை நா.முத்துகுமார் எழுத கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார். காதல் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை அழகாக கொடுத்திருப்பார்கள். 

  • தெய்வத்திருமகள் - விழியிலே

 

2011 ஆம் ஆண்டு தெய்வத்திருமகள் படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில் “விழிகளில் ஒரு வானவில்” பாடல் சைந்தவி குரலில் இடம் பெற்றிருந்தது. 

  • றெக்க - கண்ணை காட்டு போதும்

 

2016 ஆம் ஆண்டு ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் “றெக்க” படம் வெளியானது. டி.இமான் இசையமைத்த இந்த படத்தில்  ஷ்ரேயா கோஷல் பாடிய “கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்” என்ற பாடல் காதலின் உறுதியை வெளிப்படுத்தியது. 

  • மன்மதன் - மன்மதனே நீ 

 

2004 ஆம் ஆண்டு சிலம்பரசன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “மன்மதன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் சாதனா சர்க்கம் பாடிய “மன்மதனே நீ கலைஞன் தான்” பாடல் காதலை கொண்டாடுபவர்களின் கீதமாக அமைந்தது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget