Vairamuthu Wishes Rajini: ‛கமலும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதியானவர் தான்...’ - கவிஞர் வைரமுத்து!
தாதா சாகேப் விருது பெற்ற ரஜினி நேற்று சென்னை திரும்பினார். நள்ளிரவில் திரும்பிய அவரை ரசிகர்கள் வரவேற்றனர்.
கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா ஆகியோரும் பால்கே விருதுக்கு தகுதியானவர்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது நடிகா் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. மேலும், தனுஷ், விஜய்சேதுபதி, வெற்றிமாறன், தாணு, பார்த்திபன், இமான் உள்ளிட்டோரும் தேசிய விருது வாங்கினார்கள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கு ரஜினிகாந்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார்.
என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 26, 2021
இந்த நிலையில், விருது பெற்ற ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரின் ட்வீட் பதிவு:
“பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.
பால்கே விருது பெற்றதில்
— வைரமுத்து (@Vairamuthu) October 27, 2021
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம். pic.twitter.com/6v5uwWueAq
இந்த விருதை பெருவதற்காக ரஜினிகாந்த் கடந்த ஞாயிறு காலை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விமானத்தில் டில்லி சென்றாா். திங்கள் காலை விருதை பெற்ற ரஜினிகாந்த், இதையடுத்து நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு ஏா்இந்தியா விமானத்தில் டில்லியிலிருந்து குடும்பங்களுடன் சென்னை திரும்பினாா். சென்னை விமானநிலையத்தில் அவருடைய ரசிகா்கள் ரஜினியை வரவேற்றனா்.அவா் விமானநிலையத்தில் பேட்டி அளிக்கவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்