Udhayanithi: "உதயநிதி ஒரு பேரீச்சம் பழம்" வைரமுத்து ஏன் இப்படி சொன்னார்?
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரீச்சம் பழம் போல இனிமையானவர் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 47வது பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பேரீச்சம் பழம் போல இனிமையானவர்:
இந்த நிலையில், தீவிர தி.மு.க. ஆதரவாளரும், கவிஞருமான வைரமுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம் உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார் கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார்.
ஒருநாள்
— வைரமுத்து (@Vairamuthu) November 27, 2024
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்
உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்
கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்
அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்று
உதயநிதி… pic.twitter.com/3GzLaRR4R4
அப்போதே தெரிந்துகொண்டேன் வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று உதயநிதி பேரீச்சம் பழம்போல் மென்மையானவர்; ஆனால் அதன் விதையைப்போல் உறுதியானவர் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இவரைச் சிதைப்பதில்லை குன்றிமணி முட்டிக் குன்றுகள் சாய்வதில்லை காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும்; புதுக்கும் “தம்பீ வா தலைமையேற்க வா” அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்"
இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா, கண்ணே கலைமானே ஆகிய படங்களில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். பிரபல கவிஞரான வைரமுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவுமாகிய கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். கருணாநிதியும், வைரமுத்துவும் ஏராளமான மேடைகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர்.