மேலும் அறிய

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை...பாரதிராஜாவுக்கு கவிதை வழி அஞ்சலி செலுத்திய வைரமுத்து

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து கவிதை எழுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

தமிழ் திரையுலகினரால் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பாரதிராஜாவின் பல படஙகளில் பாடல்களை எழுதியவரும் அவரது நெருங்கிய நண்பருமான வைரமுத்து கவிதை எழுதி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். 

பாரதிராஜாவுக்கு வைரமுத்து அஞ்சலி

முதல் மரியாதைக்கு
இறுதி மரியாதை
         - கவிப்பேரரசு வைரமுத்து

பிதாமகனே 
போய்விட்டாயா?
கிராமத்து ராஜாவே 
இறந்துபட்டாயா?

எங்கள்
மண் வாசனையில் 
இன்று சாவு மணக்கிறதா?

அடைத்துக் கிடந்த
திரையுலகக் கதவுகளைத்
திறந்தவெளிக்குத்
திறந்துவிட்டவனே!

ஆகாயத்திற்கு அடுத்து
அதிக நட்சத்திரங்களை
அறிமுகம் செய்தவனே!

என்னையும்
சுயமரியாதையோடு
சுடரொளி வீசச்செய்தவனே!

உடன்பிறப்பே
ரத்தத்தின் ரத்தமே என்ற
தலைவர்களின் மொழிக்கு இணையாக
என் இனிய தமிழ்மக்களே
என்ற ரத்தினச் சொற்களுக்கு
முத்திரை சேர்த்தவனே!

நீ மாயக்காரன்
புழுதியைப் பொன்செய்தாய்

சினிமாவின் நிறம்
வெள்ளையென்று இருந்ததை
கருப்பென்று மாற்றிய
கலையாளன் நீ!

இடிந்த சுவர்களும்
உடைந்த மனிதர்களும்
கிழிந்த வாழ்க்கையும்
உன் கலையின் கச்சாப் பொருட்கள்

இந்தக் கரட்டுப்பட்டியைத் 
தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்த
அல்லிநகரத்து அரசன் நீ

இனி நான் எப்படித்
தனியாகத் தேனி போவேன்?

மேற்குத் தொடர்ச்சி மலை
அருவிகளால் அழுதுகொண்டேகேட்குமே…
எங்கே பாரதிராஜா?

கத்தாழங்காட்டுக் 
கரிச்சான் கேட்குமே…
எங்கே பாரதிராஜா?

கருவேலமரம் கேட்குமே
எங்கே பாரதிராஜா?

என்ன பதில் சொல்வேன்?
எப்படிநான் தனித்திருப்பேன்?

நீ தூரிகை
நான் வண்ணம்
நான் தூரிகை
நீ வண்ணம்

தூரிகை இல்லாமல் வண்ணமும்
வண்ணம் இல்லாமல் தூரிகையும்
என்னத்துக்காகும்?

நீ அரிவாள்
நான் கைப்பிடி
நான் அரிவாள்
நீ கைப்பிடி

அரிவாள் இல்லாத கைப்பிடியும்
கைப்பிடி இல்லாத அரிவாளும்
என்னத்துக்காகும்?

என்னை அழவிடு
உடம்பின் உப்பெல்லாம்
கண்ணீராய்க் கரையட்டும்

இனி என்ன எழுத?
நடிகர் திலகம் போல்
நானும் புலம்புகிறேன்

‘பூங்காத்து திரும்புமா?
எம் பாட்ட விரும்புமா?
பாராட்ட - மடியில் வச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?’

முதல் மரியாதை செய்தவனே
உனக்கென் இறுதி மரியாதை

Advertisement

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Embed widget