Lindsey Pearlman Demis: என்ன நடந்திருக்கும்? நீடிக்கும் மர்மம்! காணாமல் போன டிவி நடிகை சடலமாக மீட்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணமல்போன ஹாலிவுட் டிவி நடிகை மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹாலிவுட் நடிகை லிண்ட்சே பேர்ல்மேன் காணாமல் போன நிலையில் கடந்த நேற்று இறந்து கிடந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் அவர் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஜெனரல் ஹாஸ்பிடல், அமெரிக்கன் ஹவுஸ்வைஃப் மற்றும் பிற சீரியல்களில் நடித்த நடிகை லிண்ட்சே எரின் பேர்ல்மேன். இவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் கடைசியாகக் காணப்பட்ட 43 வயதான லிண்ட்சேயைக் கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஹாலிவுட்டின் குடியிருப்புப் பகுதியில் அவர் காணமால்போனது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பதிலளித்தபோது, வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
அவரது கணவர் வான்ஸ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, லிண்ட்சேயை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் இறந்துவிட்டார். அவரை காண்டுபிடிக்க முயற்சித்த அனைவரின் அன்புக்கும் முயற்சிக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதுடன் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். லிண்ட்சே பேர்ல்மேன் அவர்களின் அமெரிக்க ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக, லிண்ட்சேயின் உறவினர் சவன்னா பேர்ல்மேன் ட்விட்டரில், லிண்ட்சேயைக் கண்டுபிடிக்க மக்களிடம் உதவி கேட்டார். அவரை கண்டுபிடித்து சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
LA people, my cousin - Lindsey Pearlman - is missing. Her phone last pinged on Sunset blvd.
— Savannah Pearlman (@Savannah__P) February 17, 2022
My uncle is offering a reward that leads to finding her, please keep your eyes open. #MissingPerson #LA pic.twitter.com/nQZ9wqpU6R
This is how I will remember Lindsey Pearlman. Effortlessly beautiful and talented. Hilarious. Compassionate. Unapologetic. She lit up every room. She listened intently on stage and off. She so loved animals. I am sorry to her family and all the communities who deeply adored her. pic.twitter.com/iypa3ChBB5
— Lynn Chen 陳凌 (@MsLynnChen) February 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்