மேலும் அறிய

டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'டபுள் ஆக்குபன்சி' (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

டபுள் ஆக்குபன்சி படம் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளை தாண்டி ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, 'கட்சி செரா' பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர் 

நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குனர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள். அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது. அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படம் அனைவரது கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். 

சாம்யுக்தா விஸ்வநாத் 

அனைவருக்கும் வணக்கம். இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. குஷ்பு மேடம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்கள் முதல் முறையாக கதை சொல்லும்போது நான் படத்திற்கு உள்ளே வந்து விட்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தோஷ் உடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேஷ்மாவை நான் சிரிக்காமல் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அதிகம் பேசியுள்ளோம். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எங்களுக்கு சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி. 

நடிகர் சந்தோஷ் 

அனைவருக்கும் வணக்கம். ஆனந்திதா சுந்தர் அவர்களை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். அவர் எனது சிறந்த நண்பர். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு மிகப்பெரிய நன்றி. குஷ்பு மேடம் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பில்லர் ஆக இருந்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வின் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு அண்ணன் போல. அவர் வைத்திற்குக்கும் கதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவரால் எந்த ஒரு ஹீரோவிடமும் சென்று கதை சொல்ல முடியும். ஆனால் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உழைப்பு மிகப் பெரியது. அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்துள்ளோம். VFX டீம் அருமையான வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள். ஸ்ருதி அவர்கள் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையில் அதிரடி ஆக்சன் கதைகள் தான் பார்த்திருப்போம். இது ஒரு வித்தியாசமான படமாக அவரது இசையில் இருக்கும். பக்ஸ் சார் அவர்களுடன் ரிகர்சல் செய்துவிட்டு நடிப்பது மிகவும் பிடிக்கும், அது சுவாரசியமாகவும் இருக்கும். 

வினோத் அவர்களை நீண்ட வருடமாக தெரியும். இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ரேஷ்மா கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். ஒரு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். சாம்யுக்தா அவர்கள் எனக்கு ஒரு முதுகெலுமாக இந்த படத்தில்  இருந்துள்ளார்கள். அவருடைய பெர்பாமென்ஸை விட்டுவிட்டு நான் நன்றாக நடிப்பதற்கு உதவினார்கள். அவர்களுடைய அன்புக்கு மிகப் பெரிய நன்றி. பிருந்தா மாஸ்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடவுள் மாதிரி. எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் கொரியோகிராபி செய்துள்ளார்கள். சுந்தர் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதைக்கு ஓகே சொன்னதற்கு  நன்றி. கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். உங்கள் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக தான் இனி வரும் படங்களில் நடிப்பேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றி.

இயக்குனர் அஸ்வின் கந்தசாமி

அனைவருக்கும் வணக்கம். நான் ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஸ்டேஜில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடம் அவர்களுக்கு நன்றி. மேடையில் ஏறி என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி. அவரது வாழ்க்கையில் நடந்த பலவற்றை எனக்கு சொல்லி இருக்கிறார். படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. சாம் சிஎஸ் அவர்களின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. VFX டீமை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். என்னுடைய முதல் படத்திலேயே பிருந்தா மாஸ்டர் அவர்களுடன் வேலை செய்வது மிகப்பெரிய பெருமை. எனக்கு இது முதல் படம் என்ற உணர்வை யாரும் கொடுக்கவில்லை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்க திட்டமிட்டோம். பிறகுதான் படமாக மாறியது. சந்தோஷ் தான் முதலில் இதனை ஒரு படமாக எடுக்கலாம் என்று சொன்னார். எனக்கு முழு கான்பிடண்ஸ் கொடுத்தது அவர்தான். இந்த படத்திற்கான கதாநாயகியை தேர்வு செய்ய மிகவும் சிரமப்பட்டோம். ரேஷ்மா அவர்கள் இந்த படத்திற்காக நான் கேட்டது, கேட்காதது அனைத்தையும் கொடுத்தார். வினோத் கிஷன் இந்த படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை பண்ணுவதை தவிர்ப்பார் என்று நம்புகிறேன். படத்தின் செட் ஒர்க் மிகவும் சிறப்பாக இருந்தது. ஏசி சண்முகம் சார் அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுடைய கனவு. பத்திரிகையாளர்கள் அனைவரின் சப்போர்ட்டும் எங்களுக்கு வேண்டும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget