மேலும் அறிய

தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!

சாதி,மதம், ஆண் - பெண் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அந்த சமூகம் திருநர் மக்களை ஒடுக்குவதில் தெளிவாக இருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் மோகன் ஜியை கண்டித்து வீடியோ வெளியிட்டதை வரவேற்கிறோம்.

திருநர் மக்கள் பற்றி அவமரியாதையாக பேசிய இயக்குநர் மோகன் ஜிக்கு திருநங்கைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் டோரதி படம் வெளியானது. திருநர் மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ஜி, திருநர் மக்கள் பற்றி அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும் சில கருத்துகளை தெரிவிக்க அது சர்ச்சையானது. இதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் திருநங்கைகள் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது, “இயக்குநர் மோகன் ஜி டோரதி படம் பார்த்து விட்டு ட்வீட் போட்டிருந்தார். நேர்காணல் ஒன்றிலும் வேறு விதமாக பேசியிருந்தார். திருநர் மக்கள் ஒவ்வொரு துறையிலும் கஷ்டப்பட்டு மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நீங்கள் பாலியல் தொழில், யாசகம் கேட்பது போன்றவற்றை செய்வதாக குறிப்பிடுகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வாழும் திருநர் மக்கள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது இல்லை. இடஒதுக்கீடு, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு என திருநர் மக்களுக்காக எதுவும் கிடையாது. 

ஒவ்வொருத்தரும் கீழ் மட்டத்தில் இருந்து இப்போது மேல் மட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் சாதனைப் படைக்கும் திருநர் மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எங்களை யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்க வேண்டாம். மைக் கிடைத்து விட்டது, கேமரா முன் இருக்கிறோம் என திருநர் மக்கள் எல்லாரும் எந்த நேரமும் பாலியல் உணர்வோடு இருப்பதாக கூற வேண்டாம். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

இது மோகன் ஜி கருத்து மட்டுமல்ல. இந்த சமூகத்தில் இதுபோன்று பேசும் பலருடன் தினமும் போராடி போராடி எங்களுக்கு மனநோய் வந்து விடும் போல இருக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாங்க அமைதியாக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது இல்லை. எங்களுக்கு வேற மொழியிலும் பேசத் தெரியும். இருந்தாலும் கண்ணியத்தை கடைபிடிக்க விரும்புகிறோம். இதில் மோகன் ஜி மட்டுமல்ல பலரும் இதுபோன்று பேசுகிறார்கள். பாலின, பால் சார்ப்பு மக்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை. 

சக மனிதர்களை வெறுக்கும் வழக்கம் ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது. வரலாறு, இலக்கியத்தில் திருநர், தன் பாலின ஈர்ப்பு மக்கள் வாழ்ந்துள்ளார்கள். சாதி,மதம், ஆண் - பெண் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அந்த சமூகம் திருநர் மக்களை ஒடுக்குவதில் தெளிவாக இருக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் மோகன் ஜியை கண்டித்து வீடியோ வெளியிட்டதை வரவேற்கிறோம். டோரதி படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எங்களுக்காகவும் குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Embed widget