‛சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி...’ நேரலையில் மீசை எடுத்த சிக்கா... நெக்ஸ்ட் மொட்டை!
‛‛லைக்கிற்காக நான் இதை செய்யவில்லை. என் வேலையும் போச்சு. எனக்கு பல அவமானங்கள் .அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இதை செய்தேன்‛‛ -சிக்கா
டிக்டாக் முன்னாள் பிரபலங்கள், தற்போதைய இம்சை பிரபலங்கள் சிக்கா-சூர்யா தேவி மோதலின் உச்சம், தற்போது நீதி கேட்டு நேரலையில் புலம்பிக் கொண்டிருக்கிறார் சிக்கா. வீடு தேடி வந்து சூர்யா தேவி செருப்பால் அடித்ததால், அதற்கு புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், கடந்த சனி கிழமை வரை போலீசாருக்கு அவகாசம் கொடுத்த சிக்கா, சூர்யா தேவி மீது நடவடிக்கை இல்லை என்றால் ஞாயிற்று கிழமையன்று கட்டாயம் மீசையை எடுப்பேன் என கடந்த திங்களன்று அறிவித்தார் சிக்கா. நாட்கள் கடந்த நிலையில் சிக்காவுக்கு நீதி கிடைக்கவில்லை போலும். அறிவித்தபடி ஞாயிற்று கிழமையான நேற்று மாலை நேரலையில் வந்தார் சிக்கா. முன்கூட்டியே அந்நியன் வருகிறார் பாணியில், சிக்கா வந்து சேர்ந்தார். உலகமே பார்க்கவில்லை என்றாலும், 9 ஆயிரம் பேர், சிக்கா மீசை எடுப்பதை பார்க்க 6 மணிக்கு அலாரம் வைத்து குவிந்தனர்.
சரியாக ஆறு மணிக்கு கடையை திறந்த சிக்கா... நேரலையில் நேயர்களுக்கு(அவருக்கான) பதிலளித்தார். பின்னர் அவசரம் அவசரமா போய் ஒரே ரேசரை எடுத்து வந்து, சரட்டு சரட்டுனு மீசையை எடுக்க ஆரம்பித்தார். அவர் இழுத்த வேகத்தை பார்த்த அனைவரும் ஒரே அதிர்ச்சி. மீசையோடு தோலும் வந்துவிடுமோ என்கிற அச்சம் இது. அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக ஷேவ் செய்தார். முடித்த கையோடு மீண்டும் கமெண்ட்டுகளுக்கு பதிலளிக்க தொடங்கினார்.
இதோ... சிக்கா நேரலை வேதனை...!
இது ஆரம்பம் தான். இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றால் என் முடியை இழக்க தயார். லைக்கிற்காக நான் இதை செய்யவில்லை. என் வேலையும் போச்சு. எனக்கு பல அவமானங்கள் .அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இதை செய்தேன். என் வாழ்க்கையில் இதுவரை நான் மீசையை எடுத்ததே இல்லை. முதன்முதலாக இப்போ தான் மீசையை எடுக்கிறேன். எங்கம்மா இந்த செயலை பார்த்து மன வருத்தம் பட்டார். சொன்னதை செய்யனும். நான் எதையும் செய்யவில்லை என்றால், என்னை எவனும் லிஸ்ட்டில் வைக்க மாட்டார்கள். ஜி.பி.முத்து ஆபாசமா பேச ஆரம்பிச்சுட்டான். யாரும் அவனை கண்டுக்க மாட்றாங்க. ஆன்லைனில் ஆபாச புகார் கொடுத்தவங்கள்ளெல்லாம் இப்போ எங்கே போனீங்க...? ஜி.பி.முத்து என்ன பேசுறான்.... நெல்லை பாஷை தான் அவனுக்கு உதவுது. நான் கேவலமா திட்டினால், என்னை கேவலமா திட்டலாம். அதுக்காக வீடு தேடி வந்து செருப்பை வைத்து அடிக்கலாமா? மீசை எடுத்து இப்போ தில்லுமுல்லு ரஜினி மாதிரி மாறியிருக்கிறேன். ‛எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே...’ என்கிற தலைப்பில் பதிவான அந்த வீடியோவில் புலம்பித் தீர்த்த சிக்கா, தன் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறி மனவேதனையுடன் நேரலையை நிறைவு செய்தார்.
இதோ சிக்காவின் நேரலை வீடியோ...