மேலும் அறிய

Rithesh Bhatra : இந்திய சினிமாவின் அரிய பொக்கிஷம் இயக்குநர் ரிதேஷ் பத்ராவிற்கு இன்று பிறந்தநாள்..!

இயக்குநர் ரிதேஷ் பத்ராவின் பிறந்தநாள் இன்று. இவரது படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டு வருகின்றன.அவரது பிறந்தநாளான இன்று அவரது சினிமா பயணத்தைப் பற்றி காணலாம்.

தி லஞ்சு பாக்ஸ் திரைப்பட இயக்குநர் ரிதேஷ் பத்ராவிற்கு இன்று தனது 44 ஆவது பிறந்தநாள். மும்பையில் ஒரு மத்தியத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரிதேஷ் பத்ரா. தனது பள்ளிப் படிப்பை முடித்து  மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்து சில காலம் பொருளாதாரா ஆலோசகராக வேலைப்பார்த்த ரிதேஷ் பத்ரா இயக்குநராக வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேற்ற மும்பைக்குத் திரும்பினார்.

குறும்படங்கள்

தொடர்ச்சியாக குறும்படங்களை இயக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார் ரிதேஷ். இவர் இயக்கிய குறும்படங்கள் கிட்டதட்ட 55 திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் சர்வதேச விழாக்களில் பரவலான அங்கீகாரம் பெற்றது. சர்வதேச கான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது.

லஞ்சு பாக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து தி சென்ஸ் ஆஃப் அன் என்டிங் என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கினார் ரிதேஷ். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நவாசுத்தீன் சித்திகை வைத்து ஃபோட்டோகிராஃப் திரைப்படத்தை இயக்கினார் ரிதேஷ் பத்ரா. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார் ரிதேஷ் பத்ரா. 

தி லஞ்ச் பாக்ஸ்

தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்தை இயக்குவதற்கு முன் அந்த படத்தில் இடம்பெற்ற டப்பாவாலாக்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கினார் ரிதேஷ். இந்த ஆவணப்படம் அனைவராலும் பாராட்டப்பட அதனை மையமாக வைத்து அவர் இயக்கியப் படம் தான் தி லஞ்ச் பாக்ஸ்.  இர்ஃபான் கான்,  நிர்மத கார் , நவாசுத்தீன் சித்திக் ஆகியோர் நடித்தனர்.

சாப்பாட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒரு டெலிவரி சேவை தான் டப்பாவாலா. ஆனால் எந்த வித தொழில்நுட்பத்தின் மேற்பார்வையின் கீழ் இல்லாமல் மனிதர்களின் நேரடி பங்கீட்டில் வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு நடைமுறை இது.

ஈலா என்கிறப் பெண் தனது கணவனுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ் தவறாக சாஜன் என்கிற மனைவியை இழந்த 50 வயது ஆணிடம் சென்றடைகிறது. தனது கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டவராய் உணர்கிறார் ஈலா. தான் ஆசைய ஆசையாக சமைத்துக் கொடுக்கும் உணவிற்காக ஒரு நாள் கூட தனது கணவனிடம் இருந்து வராத பாராட்டு சாஜனிடம் இருந்து வருகிறது.இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதே தி லஞ்ச் பாக்ஸின் கதை. உலக அளவில் இந்தியத் திரைப்படங்களுக்கான அங்கீகாரத்தை கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார் ரிதேஷ் பத்ரா என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சந்தானம் நடிக்கும் '' SANTA 20''...படப்பிடிப்பு அப்டேட்
சந்தானம் நடிக்கும் '' SANTA 20''...படப்பிடிப்பு அப்டேட்
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படப்பிடிப்பு துவக்கம்
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படப்பிடிப்பு துவக்கம்
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்!
அமேசான் பிரைம் காமெடி டிராமா சீரிஸ் லோக்கல் டைம்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அமேசான் பிரைம் காமெடி டிராமா சீரிஸ் லோக்கல் டைம்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget