Cinema Headlines Sep 4 : 'தி கோட்' ஸ்பெஷல் ஷோ, லோக்கி அட்லீ வாழ்த்து, முன்பதிவில் சாதனை... ஃபஹத் பாசில் பாலிவுட் என்ட்ரி... இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines Sep 4 : எங்கும் தி கோட் பீவர். முன்பதிவில் சாதனை, ஸ்பெஷல் ஷோ, லோகேஷ் கனகராஜ் அட்லீ வாழ்த்து. இம்தியாஸ் அலி இயக்கும் படத்தின் மூலம் ஃபஹத் பாசில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
![Cinema Headlines Sep 4 : 'தி கோட்' ஸ்பெஷல் ஷோ, லோக்கி அட்லீ வாழ்த்து, முன்பதிவில் சாதனை... ஃபஹத் பாசில் பாலிவுட் என்ட்ரி... இன்றைய சினிமா செய்திகள் The GOAT vibe glorifying is everywhere special show pre booking rocks fahadh faasil bollywood entry today cinema headlines september 4 Cinema Headlines Sep 4 : 'தி கோட்' ஸ்பெஷல் ஷோ, லோக்கி அட்லீ வாழ்த்து, முன்பதிவில் சாதனை... ஃபஹத் பாசில் பாலிவுட் என்ட்ரி... இன்றைய சினிமா செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/04/bc03f8331fd384c09a27a061056a6ab11725452019053224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்பதிவில் சாதனை :
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் முன்பதிவை முறியடித்து ரூ.12.82 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது 'தி கோட்' திரைப்படம் என Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. படத்தின் ஒட்டுமொத்த முதல் நாள் வசூல் 30-40 கோடி ரூபாய் வரம்பில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வில்லன் நடிகர் காலமானார் :
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களில் ஒருவரான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்த மோகன் நடராஜன் ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் 'பூக்களை பறிக்காதீர்கள்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து நம்ம அண்ணாச்சி, மகாநதி, சிட்டிசன், கோட்டை வாசல், புதல்வன், அரண்மனை காவலன், பதவி பிரமாணம், பட்டியல் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள மோகன் நடராஜன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் இறப்புக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் ஃபஹத் பாசில் அறிமுகம் :
சோச்சா நா தா , ஜப் வி மெட், ராக்ஸ்டார், அமர் சிங் சம்கிலா போன்ற கிளாசிக் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு காதல் கதை கொண்ட படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் நடிகர் ஃபஹத் பாசில். இப்படத்தின் பணிகள் வரும் 2025 தொடக்கத்தில் ஆரம்பித்து ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இம்தியாஸ் அலியின் 10வது திரைப்படமாகும்.
ரைட் வித் விஜய் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நாளை செப்டம்பர் 5ம் தேதியான நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்றொரு முன்னெடுப்பை படக்குழு எடுத்துள்ளது. தந்தை விஜய் பைக் ஓட்ட பின்னால் இளம் விஜய் இடத்தில் ரசிகர்கள் தங்கள் முகத்தை பொருத்திக் கொள்ளலாம் . ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் ரசிகர்கள் இதை எடிட் செய்து பார்க்கலாம் என தெரிவித்து இருத்தது. அதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர்களின் முகங்களை பொருத்தி எடிட் செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
லோகேஷ் - அட்லீ வாழ்த்து :
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸை அதிர விடப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் 'தி கோட்' படம் வெற்றி பெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். நடிகர் விஜயின் தெறி , மெர்சல் , பிகில் மூன்று பிளாக் பஸ்டர் ஹிட்களை கொடுத்த அட்லீயும், லியோ மற்றும் மாஸ்டர் என இரு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜும் ஒன்று சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கோட் ஸ்பெஷல் ஷோ :
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நாளை தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகெங்கிலும் உள்ள 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு தவிர்த்து கேரளா மற்றும் தெலங்கானாவில் தி கோட் படத்திற்கு அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. தமிழகத்தில் கோயம்புத்தூரில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே காலை 7 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. தமிழகத் திரையரங்கைப் பொறுத்தவரை செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)