Hugh Jackman: உலகப்புகழ்பெற்ற நம்ம எக்ஸ்மேனுக்கு கேன்சரா..? அவரே தந்த விளக்கம் இதுதான்..!
Hugh Jackman: ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேனுக்கு புற்றுநோய் இல்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மேனுக்கு (Hugh Jackman) சமீபத்தில் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அவருடைய புற்றுநோய் பரிசோதனை முடிவுகள் ‘நெகடிவ்’-ஆக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஹக் ஜேக்மேன் மூக்கில் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்படவில்லை என்ற தகவல்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
எக்ஸ்மேன்:
மார்வெல் சினிமாடிக் யூனிவ்ர்ஸின் புகழ்பெற்ற எக்ஸ்மேன் படத்தில் வோல்வரீன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஹக் ஜேக்மேன். 54 வயதான ஜேக்மேன், சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இரண்டொரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வந்ததும் தெரிவிக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய புற்றுநோய் பரிசோதனை முடிவுகள் ‘நெகடிவ்’ என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மூலம் தெரிவித்திருந்தார். தனது புற்றுநோய் இல்லை என்பதையும் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “ என்னுடைய புற்றுநோய் பரிசோதனை ‘நெகடிவ்’ ஆக வந்துள்ளது. உங்களுடைய அன்புக்கு நன்றி. இந்தச் செய்தியை மக்களுக்கு தெரிவித்த மீடியாவிற்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹக் ஜேக்மேன் ரசிகர்களுக்கு அறிவுரை:
”ரசிகர்களே, வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்த தறவாதீர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். எந்த பருவமானாலும் SPFஅதிமாக உள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க.