ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
தஞ்சையில் சாலை விதிகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வந்த 100 வாகன ஓட்டிகளுக்கு, ஜெயிலர் 2 திரைப்படத்தின் 400 இலவச டிக்கெட்டுகளைத் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளைப் பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 வாகன ஓட்டிகளுக்கு 400 டிக்கெட்டுகள்
தஞ்சையில் சாலை விதிகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வந்த 100 வாகன ஓட்டிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஜெயிலர் 2 திரைப்படத்தின் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் இந்தப் பரிசுகளை வழங்கினர்.
ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் தலா நான்கு டிக்கெட்டுகள் வீதம் மொத்தம் 400 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சாலை விதிகளைப் பின்பற்றியவர்களுக்கு திரைப்படம் பார்க்கும் வாய்ப்புடன் ஊக்கப் பரிசும் கிடைத்துள்ளது.
ஜெயிலர் 2
ரஜினியின் 172 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் , எஸ் ஜே சூர்யா , வித்யா பாலன் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , ஜாக்கி ஷ்ராஃப் , ரம்யா கிருஷ்ணன் , யோகிபாபு , சூராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இபப்டத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் 2 திரைப்படம் முன்பதிவுகளில் உலகளவில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















