Malavika Mohanan : மாஸ்டர் படத்திற்கு பிறகுதான் எனக்கு மார்கெட்: தங்கலான் நடிகை மாளவிகா
விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்த பின்பே தமிழ் சினிமாவில் தன் மார்கெட் பெரிதானதாக தங்கலான் பட நடிகை மாளவிகா மோகணன் தெரிவித்துள்ளார்.
தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , பார்வதி திருவொத்து , மாளவிகா மோகணன் , பசுபதி , அர்ஜூன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒருபக்கம் தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வர இன்னொரு பக்கம் முன்பதிவுகளில் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. தங்கலான் படத்தில் நடித்த நடிகர்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி நடிகை மாளவிகா மோகணன் தமிழ் சினிமாவில் தனக்கு மார்கெட் உருவான பின்னணியை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மாஸ்டர் படத்திற்கு பின்தான் எனக்கு மார்கெட்
பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான மாளவிகா மோகணன் இராணிய இயக்குநர் ஜாஃபர் பனாகி இயக்கிய 'Beyond the Clouds' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்டைப் படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படம் இவருக்கு வெகுஜனத்திடம் அங்கீகாரம் பெற்று தந்த படம் என்று சொல்லலாம். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
Malavikamohan about @actorvijay 😍🔥
— Mahi Bro (@Mahi14345) August 12, 2024
Master movie ku அப்புறம் தான் என்னோட Tamil cinema carrier நல்லா இருக்குது @MalavikaM_ ❤😍🔥 pic.twitter.com/igKH0kWKoF
" மாஸ்டர் தமிழில் என்னுடைய இரண்டாவது படம். தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு இடம் இருக்கிற்து என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதற்கு காரணம் விஜய்தான். விஜய் எப்போது எதாவது ஒன்றை பாராட்டும்படி சொல்லிக் கொண்டே. இருப்பார். அதுவும் விஜயுடன் 6 மாதங்கள் ஒரு முழு படத்தில் இணைந்து வேலை செய்யும்போது நமக்கே நம் மேல் நம்பிக்கை ஏற்படும். பேட்ட படத்தில் நான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அடுத்த படமே விஜய் மாதிரியான ஒரு பெரிய ஸ்டாருடன் நடிக்கையில் என்னுடைய சினிமா மார்கெட் மிகப்பேரிய உயரத்திற்கு சென்றது . இந்த படத்தில் நடித்து முடித்த பின் நான் ரொம்ப பாசிட்டிவான மனநிலையுடன் இருந்தேன். அதற்காக நான் எப்போதும் விஜய்க்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்று மாளவிகா மோகணன் தெரிவித்துள்ளார்.