மேலும் அறிய

Thalapathy 67 Update: விஜயுடன் மோதும் சஞ்சய் தத்.. லாக் செய்த லோகேஷ்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. 

நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால்  ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப்படத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை சமந்தாவை வில்லியாக நடிக்க வைப்பதற்கும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Thalapathy 67 Update: விஜயுடன் மோதும் சஞ்சய் தத்.. லாக் செய்த லோகேஷ்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதை உறுதி செய்தார். இதைத்தவிர நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாகவும்,மிக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

உறுதியான அப்டேட் 

இந்த நிலையில்  ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதை தனியார் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ்  ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத்தை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இந்தப்படத்திற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் இறுதியில் தொடங்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 1940 களில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும், இந்தப்படத்தில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல நடிகர் விஜய் வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.       

முன்னதாக  ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார். அண்மையில் ஜில் ஜங் ஜக்  படத்தின் இயக்குநர்  தீரஜ் வைத்தி  லோகேஷ் மற்றும் ரத்னகுமாருடன் இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்தார். இதன் மூலம் இந்தக்கூட்டணியில் அவரும் இணைகிறார் என்ற தகவலும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டன.  அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்  தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தில் தன்னை நடிக்க கேட்டதாக  யோகிபாபு கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜயுடன் யோகிபாபு 6 ஆவது முறையாக இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget