Thalapathy 67 Cast: அடடடா..! “தளபதி 67” படத்தில் இணைந்த நடிகை ப்ரியா ஆனந்த்... எகிறும் எதிர்பார்ப்பு..!
Thalapathy 67 Cast Update: தளபதி 67 படத்தின் மூலம் விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும், இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
![Thalapathy 67 Cast: அடடடா..! “தளபதி 67” படத்தில் இணைந்த நடிகை ப்ரியா ஆனந்த்... எகிறும் எதிர்பார்ப்பு..! Thalapathy 67 Cast and Crew Update Priya Anand officially part of Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Movie Now Thalapathy 67 Cast: அடடடா..! “தளபதி 67” படத்தில் இணைந்த நடிகை ப்ரியா ஆனந்த்... எகிறும் எதிர்பார்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/31/54acbd51022201926d95b273b1f558db1675161871371572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். கொரோனா காலத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று திரையுலகினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் மூலம் விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர் என்றும், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
முன்னதாக த்ரிஷா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும், மன்சூர் அலிகான் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட தரப்பும் கிட்டதட்ட உறுதி செய்தது.
வைரலான வீடியோ
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர்.
அடுத்தடுத்து வெளியாகும் “தளபதி 67” அப்டேட்
இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. அதன்படி முதலாவதாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “தளபதி 67 படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழில் 2009 ஆம் ஆண்டு வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா ஆனந்த், 180, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, எல்கேஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் அந்தகன், காசேதான் கடவுளடா படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)