மேலும் அறிய

Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!

Coolie Rajinikanth: கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.

Coolie Rajinikanth - Lokesh Kanagaraj: நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இயக்கும் “கூலி” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் கூலி. மிஸ்டர் பாரத் திரைப்படத்தைத் தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் உடன் இப்படத்தில் சத்யராஜ் இணைகிறார்.

ரஜினியின் மாஸ் ஃபோட்டோவுடன் அப்டேட்

இப்படத்தில் ரஜினியின் நண்பராக, வெய்ட்டான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாகக் கூறப்படுகிறது.  முன்னதாக இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ஒருபுறம் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும், மறுபுறம் வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருந்த இளையராஜாவின் டிஸ்கோ பாடலின் இசையால் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இப்படி படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பு, சர்ச்சை என பேசுபொருளாகி ஓய்ந்துள்ள நிலையில், கூலி படம் பற்றிய மாஸ் அப்டேட் ஒன்றினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது பகிர்ந்துள்ளார்.

அதன்படி கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் லுக் டெஸ்ட்டுக்காக ரஜினிகாந்தை தான் எடுத்த மாஸான செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா பட லுக்கில் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட இந்தப் புகைப்படத்திலும் இடம்பெற்றுள்ல நிலையில், இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் ஹார்ட்டின்களை அள்ளி வருகிறது.

ஓய்ந்த சர்ச்சை

கூலி படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், தன் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா படக்குழுவுக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பியது முன்னதாக சர்ச்சைகளைக் கிளப்பி பேசுபொருளானது. இதனிடையே இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது பற்றிய கேள்விக்கு, “காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்னை” என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பதிலளிக்க, இந்தப் பிரச்னை ஒருவழியாக ஓய்ந்தது.

மேலும் முன்னதாக கூலி படத்தின் ஸ்க்ரிப்பிட்டில் ரஜினிகாந்தின் ஆலோசனையின் பெயரில் லோகேஷ் சில மாற்றங்களை செய்ததாகவும், தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஜூனில் தொடங்கி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது ஜூலை முதல் ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் லோகேஷே அப்டேட் தந்துள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொருபுறம் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Actor Ranjith: “சுயசாதியை விமர்சித்த பாலச்சந்தர், இன்றைய இயக்குநர்களுக்கு தைரியமில்லை” - நடிகர் ரஞ்சித் கருத்து

Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget