மேலும் அறிய

Thala 61 Music Director: ‘தல 61’ படத்தின் இசையமைப்பாளர் இவரா? சமூகவலைதளங்களில் வைரலாகும் ட்வீட்..!

2019 மார்ச் 31-ஆம் தேதி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வலிமைக்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள ‘தல 61’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டின் ரீமேக்கான  ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில்,  ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோன, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து பிரச்னைகளும் தீர்ந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு பணிகள் உள்ளன. 

இந்த நிலையில், இதே கூட்டணி மூன்றாவது முறையாக இணைவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ‘தல61’ படம் குறித்து அஜித் ரசிகர்கள் எதோ ஒரு தகவலை வெளியிட்டு, அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்தவகையில், தல61 படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறி, ஜிப்ரானின் பழைய ட்விட்டை தற்போது ஷேர் செய்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

2019 மார்ச் 31ஆம் தேதி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடின்ப்பின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த டுவிட்டில், அஜித் சார், “நாம் சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ கூறியதாக ஜிப்ரான் பதிவிட்டிருந்தார். இதைவைத்துக்கொண்டு, தல 61 படத்தின் இசை ஜிப்ரான் என்று ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து  வருகின்றனர்.

போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்தாலும், முதல் இரு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே மியூசிக் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் என்று அஜித் ரசிகர்கள் டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளனர்.

 ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பல சாதனைகள் படைத்தது குறிப்பிடத்தக்கது.

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, அக்டோபருக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

90 லட்சம் பார்வை...ட்ரெண்டிங்கில் நம்பர் ஓன் - ‛நாங்க வேற மாறி ’ என மீண்டும் நிரூபித்த வலிமை!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget