மேலும் அறிய

90 லட்சம் பார்வை...ட்ரெண்டிங்கில் நம்பர் ஓன் - ‛நாங்க வேற மாறி ’ என மீண்டும் நிரூபித்த வலிமை!

யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்த வலிமை முதல் பாடல், அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அஜித்தின் நடிப்பில்  ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இப்போது, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  ‘வலிமை’ படத்தின் முதல் பாடல்  ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2ஆம் இரவு 10.45 மணியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அத்துடன் அஜித் கை கட்டி நிற்பது போன்ற ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப் பாடலின் லிரிக் வீடியோவின் யூடியூப் லிங்கை சோனி மியூசிக் வெளியிட்டது. அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சொன்ன நேரத்தில் ‘நாங்க வேற மாறி’  பாடல் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர். யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை பொருத்து, படத்தின் வெளியீடு தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget