மேலும் அறிய

Chaitanya : ‘நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன்’ - வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடன இயக்குநர்..

தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வந்த சைதன்யா கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வந்த சைதன்யா கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக சினிமாவை ஒப்பிடும்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில்  பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' என்கிற டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குநராக பிரபலமானவர் சைதன்யா. இவர் ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சில பிரபலங்களின் படங்களின் பாடல்களுக்கும் நடன இயக்குநராக பணியாற்றியதால் திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்

இவரது நடனத்தை டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவா பாராட்டியுள்ளார். இப்படியான புகழ் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் சைதன்யா கடுமையான கடன் நெருக்கடியில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் நேற்று முன்தினம் நெல்லூர் உள்ள கிளப் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரி என்னை எந்த பிரச்சனையும் சந்திக்க விடாமல் நன்றாக கவனித்துக்கொண்டனர். எனது நண்பர்கள் அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பலரைத் தொந்தரவு செய்தேன், அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.பண விஷயங்களில் எனது நல்ல குணத்தை இழந்துவிட்டேன்.கடன் வாங்குவது மட்டுமல்ல, அதைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும்.ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.தற்போது நான் நெல்லூரில் இருக்கிறேன். எனது கடைசி நாள். எனது கடன் தொடர்பான பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார். 

சைதன்யாவின் மரணம் குறித்த செய்தி வெளியானதும் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவரின் கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும்  வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வாகாது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget