சிம்புவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நாகசைதன்யா...! வருத்தத்தில் ரசிகர்கள்..!
சிம்பு நடிப்பில் பிளாக்பஸ்டரான படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யா நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு அவருக்கு கைநழுவி போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகசைதன்யா. பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் வாரிசு ஆவார். இவருக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்ற நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர்.
இதற்கு பிறகு சமந்தா ஒருபுறமும், நாகசைதன்யா ஒரு புறமும் அவரவர் பணிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், நடிகர் நாகசைதன்யாவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கான வாய்ப்பு கை நழுவி போகியுள்ளது.
நாக சைதன்யா தற்போது தெலுங்கில் வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மாநாடு. டைம்லூப்பை அடிப்படையாக கொண்டு தமிழில் உருவாகிய முதல் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் டகுபதி கைப்பற்றியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது நாகசைதன்யா நடித்து வருவதால் மாநாடு ரீமேக்கிலும் அவர்தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநாடு படத்தின் ரீமேக்கில் நடிகர் ராணா டகுபதியை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
வெங்கட்பிரபு இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது மாநாடு திரைப்படம் ஆகும். மிகவும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டு அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. நடிகர் சிம்பு நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யாதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரு படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் இருவருமே மாறி, மாறி நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Simbu Emotional Speech: "முதல்வருக்கும், உதய் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி...!" மேடையிலே உணர்ச்சிவசப்பட்ட சிம்பு..!
மேலும் படிக்க : Cadaver OTT Release: அமலாபால் தயாரித்து நடித்த ‘கடாவர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்..இதை படிங்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்