Amudhavum Annalakshmiyum: செந்திலுக்கு விடுக்கப்பட்ட சவால்.. அமுதா எடுத்த முடிவு..! 'அமுதாவும் அன்னலட்சுமியும்' இன்றைய எபிசோட் என்ன?
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தான் வாத்தியார் ஆவேன் என அமுதாவிடம் செந்தில் வாக்குக் கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
அமுதாவும் அன்னலட்சுமியும்
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.
இன்றைய எபிசோடில் செந்தில் காலேஜில் படிக்கும் விஷயம் அறிந்து வீட்டிற்கு வந்த அன்னம், அமுதாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அழுகிறார். நான் கூட என் பையனை நம்பவே இல்லை. ஆனா நீ என் பையனை நம்பி இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணிருக்க, எத்தனை தலைமுறை ஆனாலும் நீ தாம்மா என் குடும்பத்துக்கு குலசாமி என கும்பிடுகிறார்.
இதனையடுத்து மாணிக்கம் வண்டி ஓட்டும் போது முன்னால் சென்ற குமரேசன் மீது தற்செயலாக இடிக்க போகிறார். இதனால் கடுப்பாகும் குமரேசன் என்ன மாணிக்கம் வயசாயிடுச்சுன்னா, மருமகன் செந்தில் கிட்ட கடையை பார்த்துக்க சொல்ல வேண்டியது தானே, அதை விட்டுபுட்டு அவனை படிக்க வைக்க போறேன்னு நடக்காததை நினைச்சு கோட்டை கட்டுறீங்க என நக்கலாக பேசுகிறான்.
வாத்தியார் ஆவேன் என சபதம்
அப்போது வீட்டிலிருந்து வெளியே வரும் அன்னம், என் பையன் படிச்சி வாத்தியார் ஆவான். இந்த ஊர்ல மறுபடியும் நாங்க தலைநிமிர்ந்து நடப்போம், அதை நீங்க பார்க்க தான் போறீங்க என சவால் விடுகிறாள். இதனைத் தொடர்ந்து அமுதா HOD-யிடம் செந்திலை தான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்துறனோன்னு தோணுது என கூறுகிறாள். பின் HOD-யின் அறிவுறுத்தலில், தானே படிக்கலாம் என முடிவெடுக்கிறாள். இதனை மாணிக்கத்திடம் தெரிவிக்கிறாள்.
இதனைப் பார்த்த செந்தில் மறுநாள் அமுதாவிடம் நானே படித்து வாத்தியார் ஆகிவிடுவேன் என வாக்கு கொடுக்கிறான். இதற்கிடையில் உமா, பழனி இருவரும் வடிவேலுவிடம் அமுதா ஆரம்பிச்ச கடையை இழுத்து மூடனும்னா நீ ஒரு கடைய ஆரம்பிச்சி அவங்களை விட கம்மியான விலைல பொருளை குடு என ஏத்தி விடும் காட்சிகள் இடம் பெறுகிறது.