Parijatham Serial: போதையில் தள்ளாடும் இசை.. ஹோட்டலில் கலாட்டா - பாரிஜாதத்தில் இன்று
பாரிஜாதத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் விஷாலை திருத்த இசை முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசை போதையில் ஆர்ப்பாட்டம்:
அதாவது விஷாலை சந்திக்கும் இசை இனிமே நீங்க குடிக்க கூடாது. நீங்க குடிச்சா நானும் குடிப்பேன் என்று சொல்லி சரக்கை எடுத்து குடித்து விடுகிறாள்.
இதனால் இசை தள்ளாடி ஆர்ப்பாட்டம் செய்ய விஷால் அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறான். வரும் வழியில் இசை ஐஸ்கிரீம் வேண்டும் இது வேண்டும் அது வேண்டும் என கலாட்டா செய்கிறாள்.
கலாட்டா:
ஹோட்டல் கடையில் சாப்பிட வருவது இசை ஆரவாரம் செய்ய விசாரிக்க செய்வதறியாது தவிக்கிறான். பிறகு வீட்டில் யாருக்கும் தெரியாமல் இசையை உள்ளே அழைத்து வந்து ரூமுக்குள் படுக்க வைக்க இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது.
இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















