Parijatham: கல்யாண பத்திரிகையால் கடுப்பாகிய ஸ்ரீஜா.. பாரிஜாதத்தில் இன்று
பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுப்ரதா தேவியால் மீண்டும் வீட்டுக்கு வந்த இசை ஸ்ரீஜாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஸ்ரீஜாவுக்கு பதில் இசை பெயர்:
அதாவது, அடுத்ததாக கல்யாண பத்திரிக்கை அடிக்க வேண்டிய வேலைகளை பார்க்க சொன்ன விஷாலின் அண்ணா, அதற்கான வேலைகளை செய்கிறான். ஆனால் கல்யாண பத்திரிக்கை ஸ்ரீஜா பெயருக்கு பதிலாக இசையின் பத்திரிக்கையை அச்சடிக்க வைக்கின்றனர்.
கோபத்தில் ஸ்ரீஜா:
பிறகு இசை இந்த பத்திரிக்கையை பார்க்கிறாள். ஸ்ரீஜா கல்யாண பத்திரிக்கை தனது அப்பாவிடம் கொடுக்க அவர் இசையின் பெயரை பார்த்து யார் இது என்று கேட்க, ஸ்ரீஜா கடும் கோபம் அடைகிறாள். வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா இசையை பிடித்து அடிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















