Parijatham: இசையின் புடவையை எரிக்க முயற்சித்த ஸ்ரீஜா... பாரிஜாதத்தில் இன்று
போகி பண்டிகை கொண்டாட இசையின் புடவையை ஸ்ரீஜா எரிக்க முயற்சித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசைக்காக வர்ஷினி சாப்பாடு கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இசை புடவை எரிக்கத் தயாரான ஸ்ரீஜா:
அதாவது, அடுத்த நாள் காலையில் போகி பண்டிகையை கொண்டாட தயாராகின்றனர். அப்போது சிந்தாமணி இசை கட்ட வைத்திருந்த புடவையை கொண்டு வந்து ஸ்ரீஜாவிடம் கொடுக்க, அவள் அந்த புடவையை எரிக்க வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து மறைத்து விடுகிறாள்.
அடுத்து ருக்குமணி வர்ஷினியிடம் உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம் என்று சீர் கொடுத்தது பற்றி பேசி திட்ட, அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்ல என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள். ,கீழே எல்லாரும் காத்திருக்க விஷால் இப்போதும் வர மாட்டான் என்று சொல்கின்றனர்.
அதிர்ச்சி தந்த இசை:
ரூமில் இசை விஷாலை எழுப்ப முயற்சி செய்து தெரியாமல் பாத்திரத்தை போடுவது போல், அவன் தலையில் போட்டு எழுப்ப விஷால் கோபப்பட்டு மீண்டும் படுத்து விடுகிறாள், தொடர்ந்து இசை ரூமிலேயே பொருட்களை கொளுத்த விஷால் கருகும் வாடையால் அதிர்ச்சி அடைகிறான். நீங்க கீழே வரலைனா இங்க தான் போகி கொண்டாடணும் என்று ஷாக் கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















