(Source: ECI/ABP News/ABP Majha)
Meenakshi Ponnunga: சக்திக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ரங்கநாயகி.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்று நடப்பது என்ன?
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம் பூஜா கொலை குற்றத்தை ஒப்பு கொண்டு ஜெயிலுக்கு போக சக்தியிடம் அடிவாங்கிய வக்கீல் அவளை வெளியே எடுத்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷக்தியும் ரங்கநாயகியும் ஒன்று கூடி விட வெற்றி சந்தோஷப்படுகிறான். ரங்கநாயகி 90-களில் சாப்பிட்ட உணவு பொருட்களை வாங்கி வந்து கொடுக்க ஷக்தி அதை பார்த்து எக்ஸைட் ஆகிறாள். ரங்கநாயகி நானும் உனக்கு அம்மா மாதிரி தான் என்று சொல்கிறாள்.
இதனையடுத்து இசை நாற்காலி போட்டி நடக்கிறது, எல்லாரும் ஒன்று சேர்ந்து விளையாட கடைசியில் இந்த போட்டியில் ரங்கநாயகி மற்றும் ஷக்தி என இருவரும் மட்டுமே போட்டியில் இருக்க இருவரும் சேரில் உட்காராமல் நீ உட்காரு என்று மாறி மாறி சொல்லி கொள்கின்றனர்.
மறுபக்கம் பூஜாவை வெளியே எடுத்த வக்கீல் அவள் பைத்தியமாகி விட்டதாக சொல்லி ரங்கநாயகி வீட்டிற்குள் அனுப்ப பிளான் போடுகிறான். ரங்கநாயகி சக்திக்காக ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வாங்கி வைத்திருக்க அதை யாருக்கும் காட்டாமல் மறைக்கிறாள். அது என்ன கிஃப்ட் ? பூஜாவின் அடுத்த திட்டம் என்ன? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
View this post on Instagram
மேலும் படிக்க
Samantha: நான் நிம்மதியா இருந்து ரொம்ப நாளாச்சு... வருத்துடன் பேசிய சமந்தா!
நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் - கடுப்பான திரையுலகினர்!