Karthigai Deepam: கார்த்திக் யார் தெரியுமா? மயில்வாகனத்தால் ஆடிப்போன ராஜராஜன் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் மயில்வாகனம் கார்த்தி யார்? என்ற உண்மையை சொல்வதால் ராஜராஜன் நெகிழ்ச்சியில் பூரிப்படைகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இந்த ஊரிலேயே இருக்க கூடாது என பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியிடம் கோபப்டும் மயில்வாகனம்:
அதாவது, வீட்டுக்கு வந்தது ராஜராஜன் கார்த்தியை வெளியே போக சொல்கிறார். அவர் யாருனு தெரிந்தா இப்படி சொல்லுவீங்களா என்று மயில் வாகனம் உண்மையை சொல்ல போக கார்த்திக் தடுத்து விடுகிறான்.
அடுத்ததாக சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்கார மயில் வாகனம் அத்தை நீங்க இப்படி செய்திருக்க கூடாது.. ட்ரைவர் எத்தனையோ நாள் இந்த வீட்டில் இருந்து இருக்கான். அவன் ஒருமுறையாவது நம்ம பொண்ணுகிட்ட இப்படி நடந்து இருக்கானா? தப்பா ஒரு பார்வையாவது பார்த்து இருப்பானா என்று கேள்வி கேட்கிறான்.
ராஜராஜன் நெகிழ்ச்சி:
பிறகு ராஜராஜன் தனியாக இருக்கும் போது அங்கு வரும் மயில்வாகனம் அந்த ட்ரைவர் தம்பி யார் தெரியுமா? உங்க தங்கச்சி அபிராமியோட பையன். ராஜா சேதுபதி ஊர்ல கோவில் கும்பாபிஷேகத்தை உங்க கையால் நடத்தி வைக்கணும்.. இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும் என்பதற்காக தான் இங்க வந்திருக்காரு என்ற விஷயத்தை உடைக்கிறான்.
இந்த விஷயம் அறிந்ததும் ராஜராஜன் என் தங்கச்சி பையனா? இந்த சொத்துக்கெல்லாம் சொந்த காரனா? என் மருமகன் அவன்.. அவனை இப்பவே பார்க்கணும் என வருத்தப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.





















