Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ராஜராஜன் கருப்பு வேஷத்தில் கோவில் சடங்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில், இன்று நடைபெறவிருக்கும் பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
திசை திருப்பிய ரோகிணி:
ராஜராஜன் திட்டமிட்டபடி கோவில் சடங்குகளை முடிக்க, மறுபக்கம் ரோகிணி திடீரென வலி வந்தது போல நடித்து சந்திரகலாவையும் சாமுண்டீஸ்வரியையும் திசைதிருப்புகிறார். இதனால் அவர்கள் கவனம் முழுவதும் ரோகிணி பக்கம் திரும்புகிறது.
இதற்கிடையில், ராஜராஜன் எப்போது அறைக்குத் திரும்புவார் என்று தெரியாமல் மயில்வாகனம் பதற்றத்தில் காத்திருக்கிறார். பின்னர் ரோகிணிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வர, சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் ராஜராஜனின் அறையை நோக்கி செல்கின்றனர்.
அசிங்கப்பட்ட சந்திரகலா:
அந்த நேரத்தில் சரியாக அறைக்குள் வந்து படுத்துக் கொள்கிறார் ராஜராஜன். அவரை அங்கே பார்த்த சாமுண்டீஸ்வரி, "மாமா இங்குதான் இருக்காரு" என்று கூறி சந்திரகலாவை கடுமையாக திட்டுகிறார். இதனால் அவமானத்தில் சிக்கிய சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
மறுபக்கம், கார்த்திக் ரேவதி வீட்டிற்கு சென்று பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். அதைக் கேட்ட பரமேஸ்வரி மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.
இவ்வாறு எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் கதையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் ஜீ தமிழில் காணுங்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















