Karthigai Deepam Serial: ஏளனம் செய்த காளியம்மாள்.. பரமேஸ்வரி கண்டுபிடித்த சீக்ரெட் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? கார்த்தியை காளியம்மாள் ஏளனமாக செய்ததற்கு எப்படி பதிலடி தரப்போகிறான் என்பதை இன்று காணலாம்.

ஜீ தொலைக்காட்சி தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றாகும். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஏமாற்றி கையெழுத்து வாங்கிய நபர்கள் காளியம்மாள் வீட்டில் இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஏளனமாக பேசும் காளியம்மாள்:
அதாவது, இரவானதும் கையெழுத்து வாங்கிய இருவரை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைக்க மயில்வாகனம், கார்த்திக் ஆகியோர் கிளப்பி செல்கின்றனர்.
ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியாக கைதட்டும் காளியம்மா நீ தான் போலி சாமியார் வேஷத்தில் வந்திருக்க என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று ஏளனமாக பேசுகிறாள். இதனால் இவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
பாட்டி கண்டுபிடித்த சீக்ரெட்:
மறுபக்கம் பூட்டப்பட்டு இருக்கும் கோவில் அருகே இருவருக்கு யாரோ சாப்பாடு கொண்டு போவதை கவனிக்கிறார் பரமேஸ்வரி பாட்டி. மேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர்கள் இங்கு தான் பதுங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
உடனே பாட்டி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார், கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.





















