Karthigai Deeapam: பொய் பழியில் இருந்து கார்த்தி தப்பித்தத எப்படி? விறுவிறுக்கும் கார்த்திகை தீபம்!
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் எப்படி தன் மீது விழுந்த பழி பொய்யானது என்று நிரூபித்தான் என்பது இன்று ஒளிபரப்பாகிறது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் ஒன்றாக திகழ்வது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பப்படும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் தன் மீது விழுந்த பழியை போக்க வேறொரு வழி இருப்பதாக சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை வெளியில் கொண்டு வந்த கார்த்திக்:
அதாவது, கார்த்திக் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டுகிறான். தப்பு நான் தானே செய்தேன். அதனால் நானே கட்டிக் கொள்கிறேன் என்று சொல்ல குற்றம் சாட்டிய பெண் சிவனாண்டி சொல்லி தான் இப்படி செய்ததாக உண்மையை சொல்லி விடுகிறாள்.
இதனால் கார்த்தியின் மீது விழுந்த பழி உண்மை இல்லை என்பது உறுதியாக சிவனாண்டியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர். சிறையில் இருக்கும் சிவனாண்டி எப்படியும் ரெண்டு நாள்ல வெளிய வந்துருவேன் என்று திமிராக பேச இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போட்டாச்சு அப்படி எல்லாம் வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை மீண்டும் தனது வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ள சந்திரகலாவை தவிர்த்து மற்ற எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக ராஜ ராஜன் கோவிலுக்கு சென்று கார்த்திக்காக பிரார்த்தனை செய்து பிரசாதத்தை கொண்டு வந்து கொடுக்கிறார்.
ராஜராஜனுக்கு ஷாக்:
பிறகு கார்த்திக் மாயா மற்றும் மகேஷ் இடையே இருக்கும் உறவு குறித்தும், மாயா செய்தது குறித்தும் எடுத்துச் சொல்ல ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















