Karthigai Deepam: கும்பாபிஷேகத்திற்கு வர மறுத்த சாமுண்டீஸ்வரி.. பழிபோட துடிக்கும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரி வர மறுத்த நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலில் கும்பாபிஷேக பத்திரிகையை வைத்து பூஜை செய்த நிலையில், இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கும்பாபிஷேகத்திற்கு வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி:
அதாவது, பத்திரிகையில் சிவனாண்டி, முத்துவேல் பாஸ்பரஸ் கெமிக்கலை தடவியதை கார்த்திக் பார்த்து விடுவது தெரிய வருகிறது, இதனால் அந்த பத்திரிகையையும் வைத்து பாலபிஷேகம் செய்ய சொல்லி இந்த திட்டத்தை முறியடிக்கிறான்.
அடுத்து ஊர் தலைவரான சாமுண்டீஸ்வரிக்கு முதல் பத்திரிக்கையை வைக்கலாம் என்று முடிவெடுத்து கார்த்திக் பத்திரிக்கை கொடுக்க சாமுண்டீஸ்வரி கண்டிப்பா இந்த கும்பிஷேகத்திற்கு வர மாட்டேன் என்று பதில் கொடுக்கிறாள்.
பழிபோட துடிக்கும் காளியம்மாள்:
மறுபக்கம் காளியம்மா கும்பாபிஷேகத்தை நிறுத்தி பழியை சாமுண்டீஸ்வரி மீது போட திட்டம் போடுகிறாள். தொடர்ந்து ஊரில் பந்தக்கால் நடுவதால் யாரும் வெளியூருக்கு போக கூடாது, மாமிசம் சாப்பிட கூடாது என்று அறிவிக்கின்றனர்.
பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரி வர மாட்டேன் என்று சொன்னதால் வருத்தப்பட கார்த்திக் அத்தையை கூட்டிட்டு வர வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















