Ayali: அயலியை விரட்டிவிட்ட கடைக்காரர்.. இலக்கியாவை அறைந்த காளியப்பன் - அயலி சீரியலில் இன்று
சிவாவின் அப்போ போட்டோவை அயலி தேடிக்கொண்டிருந்தபோது, கடைக்காரர் உள்ளே வந்து அவர்களை விரட்டிவிட்ட நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் அயலி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அயலி, சிவா ஆகியோர் ஸ்டூடியோவிற்கு போட்டோவை தேட வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அயலியை துரத்திய கடைக்காரர்:
அதாவது, சிவாவும் அயலியும் போட்டோவை தேட போட்டோகிராபர் சீக்கிரம் பா என்று பதறுகிறார், சிவா அம்மா அப்பா போட்டோவை கையில் எடுக்க அந்த சமயத்தில் இந்த பெரியவர் மயக்கம்போட்டு கீழே விழுகிறார்.
அடுத்து இவரை ஆசுவாதப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர், அதற்குள் கடைக்காரர் அங்கு வந்து என் கடையை யாரை கேட்டு துறந்தீங்க? வெளியே போங்க என்று துரத்துகிறார். இதனால் போட்டோவை எடுக்க முடியாமல் போகிறது.
அதன் பிறகு இந்திராணி வீட்டில் எல்லாரும் நிச்சயதார்த்தத்திற்கு துணி எடுத்து கொண்டிருக்க, அப்போது இலக்கியா லோ நெக் துணி எடுக்க இந்திராணி இப்படியெல்லாம் போட கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.
மகளை அறைந்த காளியப்பன்:
இதனால் இந்திராணிக்கும் அவளுக்கும் வாக்குவாதம் உருவாகிறது, ஒரு கட்டத்தில் இந்திராணி இந்த செங்குட்டுவன் குடும்பத்திற்கு ஒரு கௌரவம் இருக்கு. அதுக்கு மாறா யாராவது நடக்கணும்னா இந்த வீட்டை விட்டு போகலாம் என்று சொல்கிறாள்.
காளியப்பன் தனது மகளை அறைந்து மன்னிப்பு கேட்க வைக்கிறான். இதையடுத்து சிவாவும் அயலியும் வந்து கொண்டிருக்க அப்போது காரில் ஒருவர் அதே போல் மோதிரம் அணிந்திருக்க இதை பார்த்து அந்த காரன் பின்தொடர மிஸ் ஆகி விடுகிறது.
அதிர்ச்சியில் கபிலன்:
அடுத்து இந்திராணி கபிலன் ரூமுக்கு வர அவன் பெட்டில் ஒரு பார்சல் கிடக்க அதை எடுத்து பார்க்க கபிலன் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















