மேலும் அறிய

Next AGS: ப்ளீஸ்.. இவர்களில் யாரையாவது AGSஆ போடுங்க பா..! கோரிக்கை வைக்கும் எதிர்நீச்சல் ஃபேன்ஸ்..!  

எதிர் நீச்சலில் அடுத்த ஆதி குணசேகரன் யார்? சில தகுதியான நடிகர்களின் பட்டியலை பகிர்ந்த தீவிர ரசிகர்கள். 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் ஒரு தொடர் இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் 'எதிர் நீச்சல்' (Ethir neechal) தொடர்.

எதிர்நீச்சல்:

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கான ரசிகர் கூட்டம் என்பது அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் படித்த பட்டதாரிகளை திருமணம் செய்து அழைத்து வந்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கதைக்களத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி  வருகிறது. 

Next AGS: ப்ளீஸ்.. இவர்களில் யாரையாவது AGSஆ போடுங்க பா..! கோரிக்கை வைக்கும் எதிர்நீச்சல் ஃபேன்ஸ்..!  

கரடு முரடான ஆதி குணசேகரன் :

எதிர் நீச்சல் சீரியலின் மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அதிலும் மூத்த அண்ணனாக ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நெகட்டிவ் கதாபாத்திரத்துக்கு எக்கச்சக்கமான பேன்ஸ் உள்ளனர். எதிர்நீச்சல் தொடர் வெற்றிக்கு முக்கியமான கேரக்டராக கருதப்பட்ட குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அடுத்த AGS யார் ?
 
எதிர் நீச்சல் சீரியலில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்ததால் அவரின் இறப்புக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் சினிமாவில் பிஸியாக இருக்கும் காரணத்தால் வேறு சில நடிகர்களையும் தேர்வு செய்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

Next AGS: ப்ளீஸ்.. இவர்களில் யாரையாவது AGSஆ போடுங்க பா..! கோரிக்கை வைக்கும் எதிர்நீச்சல் ஃபேன்ஸ்..!  

யார் அந்த நடிகர்கள்?

மாரிமுத்துவை தவிர வேறு யாராலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை அத்தனை யதார்த்தமாக நக்கல் நையாண்டி கலந்த வில்லனாக செய்ய முடியாது. இருப்பினும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் தேர்வு செய்யப்பட வேண்டிய காட்டாயம் இருப்பதால் எதிர் நீச்சல் சீரியலின் தீவிர ரசிகர்கள் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடிய ஒரு சில நடிகர்களை சஜஸ்ட் செய்துள்ளனர். 

அந்த வரிசையில் நடிகர்கள் பொன்னவண்ணன், ரஞ்சித், இளவரசு உள்ளிட்டவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கிறது. நக்கலும் நையாண்டியும் கலந்த ஒரு வில்லனாக இருக்க வேண்டும் என்றால் அதை சிறப்பாக செய்ய கூடிய  நடிகர் என பார்த்தால் ஆனந்த்ராஜ் ஒரு காலகட்டத்தில் மிரட்டலான வில்லனாக இருந்து தற்போது காமெடியிலும் கலக்கி வருகிறார் என்பதால் அவர் பொருத்தமானவராக இருக்கலாம் என்கிறார்கள்.  நடிகர் பசுபதியும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர். அவருக்கு வாய்ப்பளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நாசர், மதன்குமார் தக்ஷிணாமூர்த்தி, விஜயன் உள்ளிட்டோரும் அடுத்த AGS கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர்கள். இவர்களின் உடல் மொழியும் பேச்சு வழக்கும் கூட  ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும். 

அடுத்த ஆதி குணசேகரனாக யார் நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget