Siragadikka Aasai :வேண்டா வெறுப்பாக மீனாவுக்கு ஊட்டி விடும் விஜயா... வெளுத்து வாங்கும் பாட்டி- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் விஜயா, ஸ்ருதிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி, மீனாவை ஸ்ருதி பக்கத்தில் போய் உட்கார சொல்லுகிறார். ”3 பேருக்கும் உன் கையாள ஊட்டணும் அதை நான் பார்க்கணும்” என்கிறார் பாட்டி. "நீ 3 மருமகளோட சந்தோஷமா இருக்குறத நான் பார்க்க வேணாவா?" என்கிறார் பாட்டி. பின்னர் 3 பேருக்கும் விஜயா ஊட்டி விடுகிறார். மீனாவுக்கு மட்டும் சாதத்தை எடுத்து வாயில் அப்பி விடுகிறார். அதற்கு பாட்டி, "என்ன ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி ஊட்டுற, மீனாவுக்கு வேற மாதிரி ஊட்டுற" என பாட்டி கேட்கிறார். இதனால் பாட்டி மீண்டும் சரியாக ஊட்டி விட சொல்கிறார்.
விஜயா ஊட்டி விடுவதை ரவி, மனோஜ் வீடியோ எடுக்கின்றனர். இதை பார்த்து பாட்டி சந்தோஷப்படுகிறார். ”விஜயா உன்னை வேலை வாங்கணும்னோ இல்ல அசிங்கப்படுத்தனும்னோ நான் இதை செய்யல. இது பண்டிகை நாள் வேற நீ இதை செய்யும் போதே எல்லோர் மனசும் குளிர்ந்து இருக்கும்” என்கிறார் பாட்டி. உன் பாட்டி மாதிரி தான் உன் அண்ணனும் இருக்காரு என ஸ்ருதி ரவியிடம் சொல்லுகிறார். முத்துவும் பாட்டி மாதிரி ஒரு இன்னொசண்ட் என ரவி சொல்லுகிறார். ”யாரு அவரா?” என ஸ்ருதி கேட்கிறார்.
மீனா பூக்கடை வச்சிருக்கா என அண்ணாமலை பாட்டி இடம் சொல்லுகிறார். அதற்கு பாட்டி ”டேய் பேராண்டி உன்னை நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு” என சொல்லுகிறார். விஜயாவிடம் உன் மருமகளுங்க உனக்கு பெருமை சேர்க்குறாங்க என சொல்லுகிறார். ”ஆனா, பாவம் பாட்டி நீ உனக்கு அப்படி ஒரு மருமக அமையலையே” என முத்து சொல்லுகிறார். ”வீட்டுமுன்னாடியே பூக்கடை வச்சி என்ன அவமானப்படுத்திக்கிட்டே இருக்காங்க” என விஜயா சொல்லுகிறார். அதற்கு பாட்டி, ”எந்த தொழிலும் தப்பு கிடையாது” என சொல்லுகிறார். பாட்டி, ”விஜயா, உன் மருமக உன்பேருல பூக்கடையாச்சி வச்சி இருக்கா, ஆனா நீ என் பேருல எதாவது ஒரு விஷயம் பண்ணி இருக்கியா?” என கேட்கிறார்.
மலேசியாவில் இருந்து வரும் ரோகினியின் மாமாவை நன்றாக கவனிக்க வேண்டும் என சொல்கிறார் விஜயா. பின்னர் ரோகினியிடம், மாமா எப்போது வருகிறார் என அண்ணாமலை கேட்கிறார். அதற்கு, நாளைக்கு மாமா கண்டிப்பா வருவாரு என ரோகினி கூறுகிறார். ரோகினி, தன் தோழி வித்தியாவுக்கு கால் பண்ணி மாமாவா நடிக்க வறேன்னு சொன்னவர் இன்னும் வர்லனு சொல்கிறார். ”மலேசியாவுல இருந்து வர மாதிரி சட்டை தைக்க கொடுத்து இருக்கானாம் அது நைட்டுக்கு தான் கிடைக்குமாம். நாளைக்கு வந்துடுவான்” என வித்யா சொல்லுகிறார். மீனாவும், முத்துவும் கட்டில் மேல் நிலா வெளிச்சத்தில் படுத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.