மேலும் அறிய

Baakiyalakshmi July 1 Episode: கோபிக்கு நெஞ்சு வலி... ஷாக் கொடுத்த ராதிகா... பாக்கியலட்சுமியில் இன்று என்ன?

பழனிசாமியும், பாக்கியவும் ஒரே இடத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட கோபிக்கு அதிர்ச்சி. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த இந்த தொடரில் தற்போது பெரிய திருமண ஆர்டர் ஒன்று கிடைத்ததில் அங்கு சமைப்பதற்காக பாண்டிச்சேரி சென்றுள்ளனர் பாக்கியா, செல்வி மற்றும் அவர்களின் கேட்டரிங் டீம்.

அதே போல ராதிகாவின் உறவினரின் வீட்டு திருமணத்திற்காக அதே இடத்துக்கு வந்துள்ளனர் ராதிகா மற்றும் கோபி. நேற்றைய எபிசோடில் பழனிசாமியை பார்த்த அதிர்ச்சியில் இருந்த கோபிக்கு இன்றைய எபிசோடில் ஒரு ஷாக் காத்துகொண்டு இருக்கிறது. அது என்ன என்பதை இப்போ பார்க்கலாம். 

Baakiyalakshmi July 1 Episode: கோபிக்கு நெஞ்சு வலி... ஷாக் கொடுத்த ராதிகா... பாக்கியலட்சுமியில் இன்று என்ன?

ஷாக் ஆன ராதிகா:

அனைத்து டிஷ்களையும் சமைத்து முடித்த பாக்கியா டீம் அந்த டிஷ் ஒவ்வொன்றையும் பரிமாறும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி கிச்சனுக்கு வர அங்கு அவரை டேஸ்ட் பார்த்து சொல்லுமாறு பாக்கியா கேட்க பழனிசாமியும் அனைத்து ஸ்வீட்களையும் சுவை பார்த்து மிகவும் அருமையாக இருப்பதாக சொல்கிறார். 

சாப்பாடு பரிமாறப்படுகிறது. சுதாகர் சாப்பிட்டுவிட்டு பாக்கியாவை பாராட்டுகிறார். சுதாகர் மனைவியும் சாப்பிட்டு பிரமாதமாக இருந்தது என சொல்லிவிட்டு நாளை சமைக்க தேவையான உணவின் லிஸ்டை பாக்கியாவிடம் கொடுக்கிறார். ஏதோ ஒரு பொருளை எடுத்து வர சொல்லி செல்வியிடம் பாக்கியா சொல்ல அதை எடுத்து வருவதற்காக செல்வி சென்று கொண்டு இருக்கும் போது அங்கு ராதிகா மயூவிடம்  போன் பேசி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ராதிகாவுக்கு செல்வியை பார்த்து செம்ம ஷாக். 

Baakiyalakshmi July 1 Episode: கோபிக்கு நெஞ்சு வலி... ஷாக் கொடுத்த ராதிகா... பாக்கியலட்சுமியில் இன்று என்ன?

கோபிக்கு நெஞ்சு வலி:

ராதிகாவை பார்த்த விஷயத்தை பாக்கியாவிடம் போய் சொல்கிறாள் செல்வி. விடு பார்த்துக்கொள்ளலாம் செல்வி என பாக்கியா சொல்ல, செல்வி அங்கிருக்கு சென்று வேலையை பார்க்கிறாள். மறுபக்கம் ராதிகா ரூமுக்கு வந்து கோபியிடம் நான் உங்க வீட்டு வேலைக்காரியை பார்த்தேன் என சொல்கிறாள். அதை கேட்டு அதிர்ச்சியான கோபி, செல்வி இங்கு இருக்கிறாள், அந்த லேம்ப் போஸ்டும் இங்கே இருக்கிறது என்றால் இவர்கள் இருவருக்கும் பொதுவானவள் பாக்கியா. அதனால் அவளும் இங்கே தானே இருப்பாள் என நினைத்து அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து கொள்கிறார். ராதிகா கோபியிடம் என்ன ஆச்சு கோபி உங்களுக்கு நெஞ்சு வலியா என கேட்க போக போக வந்துடும் போல இருக்கு என்கிறார். 

கோபி இனியாவிற்கு போன் செய்து கிராஸ் செக் செய்து கொள்கிறார். இனியாவை விசாரிப்பது போல, பாக்கியா எங்கே என கேட்க இனியா அம்மா பாண்டிச்சேரி போன விஷயம் பற்றி சொல்கிறாள். ஷாக்கான கோபி எங்க போனாலும் என்னோட நிம்மதியை கெடுப்பதற்காகவே பிளான் பண்ணுவாங்களா? என புலம்புகிறார். 

கிச்சனில் அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அங்கு பழனிசாமியும் இருக்கிறார். செல்வி தன்னுடைய வாழ்க்கை பற்றி சொல்ல பழனிசாமியும் தனது அம்மா எப்படி ஒத்தை ஆளாக இருந்து அனைவரையும் வளர்ந்ததை பற்றி சொல்லி பீல் செய்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவு வந்தது. வெளியான புதிய ப்ரோமோவில் சுதாகரும் பழனிசாமியும் பேசி கொண்டு இருக்கும் போது அங்கு கோபி வந்து நீங்க பாக்கியா எங்க போனாலும் பின்னாடியே போவீங்களா ? என கேட்க அதை கேட்டு ஷாக்காகிறார் பழனிச்சாமி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget