மேலும் அறிய

Baakiyalakshmi: இந்த குட் நியூஸ் போதுமா கோபி... ராதிகாவிடம் தோற்றுப் போன பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Sep 28: அமிர்தா பற்றின உண்மையை அறிந்து கொள்ளும் கணேஷ். வோட்டிங்கில் தோற்றுப் போன பாக்கியலட்சுமியை கிண்டல் செய்யும் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை கேன்டீனில் இருந்து வெளியே அனுப்ப வேண்டுமென பல நாட்களாக பிளான் போட்டு வந்த ராதிகாவுக்கு கோடீஸ்வரன் அமெரிக்காவுக்கு சென்றது வசதியாக போய்விட்டது. அனைத்து பொறுப்பும் இப்போது ராதிகாவின் கையில் இருப்பதால் அதை வைத்து பாக்கியாவின் கேன்டீன் கான்ட்ராக்ட் ஏழு மாசத்தில்  முடிவடைந்ததால் எங்களுக்கு இனி உங்களுடன் தொடர விருப்பமில்லை என சொல்லி வெளியேற சொல்கிறாள் ராதிகா.

எந்தக் காரணமும் இல்லாமல் “நான் ஏன் கேன்டீன் ஆர்டரை விட வேண்டும். என்னுடைய உணவு சரியில்லை என்பதை சாப்பிட்டவர்கள் சொல்லட்டும்” என சொன்னதால் ராதிகா வோட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தாள்.

Baakiyalakshmi: இந்த குட் நியூஸ் போதுமா கோபி... ராதிகாவிடம் தோற்றுப் போன பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று!
கோபி வீட்டுக்கு வந்தததும் அவரிடம் உங்களுக்கு  ஒரு குட் நியூஸ் என சொல்லி இந்த கேன்டீன் கான்ட்ராக்டை பாக்கியாவிடம் இருந்து பறித்தது பற்றி சொல்கிறாள் ராதிகா. அதைக் கேட்டு மிகவும் சந்தோஷமா கோபி ஆனந்தத்தில் மிதக்கிறார். "நான் இப்படி செய்பவளே இல்லை கோபி. ஆனா எங்க பார்த்தாலும் அவங்க வந்து நிக்குறாங்க. நிம்மதியா வேலை கூட பார்க்க முடியல. அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன்" என சொல்கிறாள் ராதிகா. அதற்கு கோபியும் இப்போ தான் நீ சரியான முடிவு எடுத்து இருக்க என பாராட்டுகிறார்.

மறுபக்கம் கணேஷ் அவனுடைய அம்மா அப்பாவை ரூமில் வைத்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு பீரோ, பெட்டி எல்லா இடத்திலும் தேடுகிறான். அப்போது அமிர்தாவின் காலேஜ் ஐடி கார்டு கையில் கிடைக்கிறது. அப்பாவும் அம்மாவும் கதவைத் தட்ட அந்த ஐடி கார்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கதவைத் திறந்துவிடுகிறான். "நான் என்னுடைய டைரி ஒன்றை தேடினேன். உங்களுக்கு தொந்தரவா இருக்க கூடாதுனு தான் கதவை மூடிவிட்டேன்" என்கிறான் கணேஷ்.

"புக்கில் அமிர்தா பெயராக இருக்கிறதே" என கணேஷ் கேட்க "நீ  ஆசைப்பட்ட மாதிரி அமிர்தாவை நாங்கள் தான் சென்னையில் படிக்க வைத்தோம். பிறகு தான் பிரச்சினை வந்ததது. அவள் எங்க இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நாங்கள் வந்துவிட்டோம்" என சமாளிக்கிறார்கள் கணேஷின் அம்மா அப்பா. அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறான் கணேஷ்.

Baakiyalakshmi: இந்த குட் நியூஸ் போதுமா கோபி... ராதிகாவிடம் தோற்றுப் போன பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று!
ராதிகா ஆஃபிசில் வோட்டிங் தொடங்குகிறது. அப்போது ராதிகா வந்து பாக்கியாவை வெறுப்பேற்றுகிறாள். “கான்ட்ராக்ட் முடிஞ்சதுனு சொல்லி கெளரவமா முன்னாடியே வெளில போயிருக்கலாம். ஆனா இப்போ அசிங்கப்பட்டு போகப்போறீங்க” என சொல்கிறாள் ராதிகா.

இங்க இருக்கவங்க எல்லாரும் என்னோட ஸ்டாப்ஸ் என்கிறாள் ராதிகா. பாக்கியா அனைவரிடத்திலும் "கடந்த ஏழு மாசமா நான் தான் கேட்டரிங் நடத்துறேன். குறைஞ்ச விலையில் தரமான சாப்பாட்டை கொடுத்து இருக்கேன். உங்களுக்கு என்னுடைய சாப்பாடு பிடித்து இருந்தால் எனக்கு வோட் பண்ணுங்க" என்கிறாள். திட்டம் போட்டு பாக்கியாவை தோற்கவைக்கிறாள் ராதிகா. “கம்மியான ஓட்டுகள் பெற்றதால் நீங்கள் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்புங்கள்” எனச்சொல்லி விட்டு செல்கிறாள் ராதிகா.

Baakiyalakshmi: இந்த குட் நியூஸ் போதுமா கோபி... ராதிகாவிடம் தோற்றுப் போன பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று!
இந்தத் தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத பாக்கியா மனம் நொந்து போகிறாள். வீட்டில் உள்ள அனைவரும் வோட்டிங் என்ன ஆனது என மிகவும் கவலையாக இருக்கிறார்கள். அப்போது பாக்கியா வருத்ததுடன் வந்து கதறி அழ, அனைவரும் அவளை சமாதான படுத்துகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்ததது.

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget