மேலும் அறிய

Baakiyalakshmi: கணேஷூக்கு கொடுத்த வாக்கு.. ஈஸ்வரி ராதிகாவுக்கு வைத்த ஆப்பு.. பாக்கியலட்சுமியில் இன்று!

Baakiyalakshmi Nov 1: கோபியிடம் பாக்யாவை பேசவிடாமல் குறுக்கே புகுந்த ராதிகா. கணேஷிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்ட பாக்கியா. பாக்கியலட்சுமியில் இன்று.   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) சீரியலின் இன்றைய (நவ.01) எபிசோடில் ஜெனி ரூமில் பாக்கியா குழந்தையைக் கொஞ்சி கொண்டு இருக்கிறாள். செழியனை பார்த்து பாக்கியா முறைத்து கொண்டே இருந்ததால் ஜெனிக்கு சந்தேகம் வந்து "என்ன செழியா ஏதாவது தப்பு பண்ணி ஆண்ட்டி கிட்ட மாட்டிகிட்டியா?" எனக் கேட்கவும் செழியன் முகமே மாறிவிடுகிறது.

ஜெனி வெளியில் சென்றதும் பாக்கியா செழியனிடம் "உனக்கு எப்படி தான் ஜெனியை ஏமாத்த மனசு வந்தது" என சொல்லி உன்னுடைய போன் இரண்டு மூன்று நாட்களுக்கு என்னிடம் இருக்கட்டும் என சொல்லி எடுத்துச் செல்கிறாள். ஜெனியும் அதனால் சந்தோஷமாக இருக்கிறாள்.

Baakiyalakshmi: கணேஷூக்கு கொடுத்த வாக்கு.. ஈஸ்வரி ராதிகாவுக்கு வைத்த ஆப்பு.. பாக்கியலட்சுமியில் இன்று!

ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் ஹாலில் படுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி கால் வலியால் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார். அப்போது பாக்கியா வந்து "நான் தைலம் தேச்சு விடுறேன்" என சொல்லவும் "வேண்டாம் நானே தேச்சுகிட்டேன் நீ போய் தூங்கு" என பாக்கியாவை அனுப்பி வைக்கிறார். 

ராமமூர்த்தி ஈஸ்வரியை கிண்டல் செய்ய நேராக ஈஸ்வரி கோபியின் ரூம் கதவைப் போய் தட்டி "நான் உள்ளே படுத்துக் கொள்கிறேன். கால்  வலியா இருக்கு" என சொல்ல, கோபி “நான் கீழே படுத்துக்குறேன். நீங்களும் ராதிகாவும் பெட் மேல படுத்துக்கோங்க" என சொல்ல "உடம்பு சரியில்லாதவன் நீ ஏன் கீழ படுக்கணும்" என ஈஸ்வரி சொன்னதும் "நானே கீழ படுத்துக்குறேன்" என ராதிகா கோபத்துடன் படுத்து கொள்கிறாள்.

அடுத்த நாள் காலை கோபியும் பாக்கியாவும் வாக்கிங் செல்லும் போது சந்தித்து கொள்கிறார்கள். "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்" என பாக்கியா சொல்ல அந்த நேரத்தில் ராதிகா அங்கே வரவும் கோபி அப்படியே  உறைந்து போகிறார். "என்ன விஷயம் சொல்லு" என கோபி சொல்ல "நான் உங்ககிட்ட பசங்க பத்தி பேசணும்" என சொல்கிறாள்.

"நீ தான் சூப்பர் மாம் ஆச்சே... எல்லாத்தையும் நீயே சமாளிப்பியே அப்புறம் என்ன?" எனக் கேட்கிறார். "இனியாவுக்கு ஏதாவது பிரச்சினைனா கூட பரவாயில்லை. பசங்களோட பிரச்சினையை அவங்களே பாத்துக்க போறாங்க" என ராதிகா சொல்ல "அவங்களுக்கு பிரச்சினைனா அவங்க நேர வந்து என்கிட்டே பேச போறாங்க. நீ ஏன் என்கிட்ட பேசணும்" என கோபி சொல்லவும் டென்ஷனான பாக்கியா "நான் பாத்துக்கிறேன்" என சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறாள்.

Baakiyalakshmi: கணேஷூக்கு கொடுத்த வாக்கு.. ஈஸ்வரி ராதிகாவுக்கு வைத்த ஆப்பு.. பாக்கியலட்சுமியில் இன்று!

பாக்கியா கணேஷ் வீட்டுக்குச் சென்று கணேஷ் அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே கணேஷ் வந்து விடுகிறான். பாக்கியா அவர்களிடம் "ஒரு மாசம் எனக்கு டைம் குடுங்க. நானே வீட்ல எல்லார்கிட்டேயும் பேசி ஒரு முடிவு எடுக்குறேன்" என சொல்ல,` "எதுக்கு ஒரு மாசம் கொடுக்கணும். நானே அமிர்தாவை நேரில் பார்த்த பேசி கொள்கிறேன்" என கணேஷ் சொல்ல "அவங்க நியாயமா பேசும் போது நாமளும் அதை ஏத்துக்கணும்" என கணேஷ் அப்பா கணேஷை சமாதானம் செய்கிறார்.

"நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசத்துல முடிவு எடுக்கலைனா?" என கணேஷ் கேட்க "நான் சொன்ன சொல்லை காப்பாத்துவேன்" என வாக்களிக்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget